இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் அசத்தல் வேலை!! விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 18 இறுதி நாள்!!
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி(Small Industries Development Bank of India – SIDBI) காலியாக உள்ள Marketing and Promotions Consultant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இப்பதவிக்கு தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற செப்டம்பர் 18 வரை ஆன்லைன்(மின்னஞ்சல் வழியாக) வரவேற்கப்பட இருக்கின்றன.
நிறுவனத்தின் பெயர்: இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி(Small Industries Development Bank of India – SIDBI)
பதவி: Marketing and Promotions Consultant
காலியிடங்கள்: Marketing and Promotions Consultant பணிக்கென ஒரு காலியிடம் ஒதுக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: Marketing and Promotions Consultant பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம்(Degree) பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 45 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் விதிகளின் படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்: இப்பதவிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு நிறுவன விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
இப்பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் //www.sidbi.in/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின்னர் அதனை பூர்த்தியிட்டு ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ஆன்லைன் வழியாக அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் முகவரி: [email protected]
முகவரி:
SIDBI,SWAVALAMBAN BHAVAN,C-11,G-Block,Bandra-Kurla Complex,Bandra East,Mumbai-400051.
கடைசி தேதி: இப்பதவிக்கு விண்ணப்பம் செய்ய வருகின்ற செப்டம்பர் 18 இறுதி நாள் ஆகும்.