ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த வழக்கு!!! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்த நீதி மன்றம்!!!

0
111
#image_title

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த வழக்கு!!! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்த நீதி மன்றம்!!!

ஆன்லைன் மூலமாக நடைபெறும் சூதாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது தொடர்பான வழக்கிற்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக நடைபெறும் சூதாட்டங்களின் மூலமாக அதிகம் பேர் தங்களின் பணத்தை இழந்து தற்கெலை செய்து கொள்கின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தமிழக அரசு அதிரடியாக தடை விதித்து சட்டம் இயற்றியது.

இதையடுத்து தமிழக அரசு விதித்த தடைக்கு எதிராக ஆன்லைன் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோரின் மத்தியில் விசாரணைக்கு வந்தது.

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர் மனுக்களின் மீதான அனைத்து விசாரணையும் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து எழுத்துப் பூர்வமாக வாதம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி இருந்தது.

இதையடுத்து ஆன்லைன் சூதாட்டங்களை தடை விதித்ததற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளுக்கும் வழங்க வேண்டிய தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை உயர்நீதி மன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திறமைக்கான விளையாட்டாக இருக்கும் ரம்மியை அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டு என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கருத முடியாது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Previous articleஉருகி உருகி காதலித்த ஐஸ்வர்யா-சல்மான்கான்… – ப்ளான் போட்டு காதலை பிரித்த நபர்கள்!
Next articleஏ.ஆர்.ரகுமானை பார்த்து சுதாரித்து கொண்ட விஜய்!! இது மட்டும் வேண்டாம்.. இயக்குநருக்கு போட்ட உத்தரவு!!