இசைப் பள்ளியில் படித்தால் அரசு வேலை கிடைக்குமா ? ஆச்சரியமூட்டும் தகவல்கள் !!

0
103
#image_title

இசைப் பள்ளியில் படித்தால் அரசு வேலை கிடைக்குமா ? ஆச்சரியமூட்டும் தகவல்கள்

தமிழகத்தில் ஏராளமானோர் கலை சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஒரு சிலருக்கு இசையின் மீதான தாக்கம் இருக்குமேயானாலும்,அதற்கான பயிற்சி பள்ளிகள் சரியாக அமைவதில்லை.

அவ்வாறு திருநெல்வேலி பரதநாட்டிய ஆசிரியை செல்வத்துக்குமாரி அதிர்ச்சி மூட்டும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையின்படி திருநெல்வேலியில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசு இசைப்பள்ளியில் படித்தால் அரசு வேலை கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கலை பயன்பாட்டுத் துறை சார்பில், இந்த இசைப்பள்ளி இயங்கி வருகிறது என்றும் . திருநெல்வேலி மாவட்டம் பெருமாள் புரம், பி. குடியிருப்பு பகுதிகளில் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த இசைப் பள்ளியில் சேர குறைந்தபட்சம் ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், 12 வயது முதல் 25 வயதிற்குள் வேண்டுமென்றும், இப்பள்ளியில் குரல் இசை, நாதஸ்வரம்,தவில்,தேவாரமும், பரதநாட்டியம் ,வயலின் ,மிருதங்கம், கற்றுக்கொடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த இசைப் பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் அரசின் பல சலுகைகள் வழங்கப்படும் வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அந்த சலுகைகளாவன :

இந்த இசைப் பள்ளியின் சார்பில் இலவச புத்தகங்கள், மற்றும் கல்வி உதவித்தொகை, மிதிவண்டி, இலவச பஸ் பாஸ், ரயில் சலுகை கட்டணம் வசதி வழங்கப்படுவது வருகிறது என்றும் ,இந்த பள்ளியின் பயிற்சிக் கட்டணமாக 350 ரூபாய் மட்டும் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வசூலிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது அனைத்திற்கும் மேலாக இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும்,ஊக்கத்தொகையாக மாதம் 400 ரூபாய் அரசு வழங்கிவருகிறது என்று அவர் பெருமையாகக் கூறினார்.

இந்த பள்ளியில் படித்து முடித்த மாணவர்கள், பெரும்பாலும் பரத நாட்டியத்தில் ஆர்வம் காட்டி வருவதாகவும் ,1997 ஆம் ஆண்டிலிருந்தே இப்பள்ளியானது செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே இசையின் மீது ஆர்வம் காட்டும் அனைவருக்கும் இந்த பள்ளி ஒரு சரியான வழிகாட்டியாகும். எனவே இதனைச் சரியாகப் பயன்படுத்தி, வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Previous articleஉங்களுக்கு தொழில் பக்தி கொஞ்சமாவது இருக்கா.. கேள்விகளால் அஜித்தை ரோஸ்ட் செய்து வரும் நெட்டிசன்கள்!!
Next articleஅம்மாவை ஏமாத்த முதியவர் வேடமிட்டு சென்ற சிவாஜி – வெளியான சுவாரஸ்ய சம்பவம் !!