மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! இனிமேல் அனைத்திற்கும் இதைகூட அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்!!
இனிமேல் பிறப்புச் சான்றிதழையும் அடையாள ஆவணமாக பயன்படுத்தும் நடைமுறை வருகின்ற அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
நாம் அரசின் சேவைகளையோ, பாஸ்போர்ட் அல்லது வேறு ஏதேனும் ஒன்றை பெற வேண்டுமானாலும் ஏதாவது ஒரு அடையாள ஆவணத்தை கொண்டு பெற்று வந்துள்ளோம். அதன்படி இதுவரை அடையாள ஆவணங்களாக வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, போன்றவற்றை அடையாள ஆவணமாக பயன்படுத்தி சேவைகளை பெற்று வந்துள்ளோம்.
இந்நிலையில் இனிமேல் நம்முடைய பிறப்புச் சான்றிதழையும் அடுத்த மாதம் முதல் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டும் என்றாலும், ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் என்றாலும், இனிமேல் பிறப்புச் சான்றிதழை பயன்படுத்தலாம்.
அதுமட்டுமில்லாமல் திருமணத்தை பதிவு செய்யவும், மேற்படிப்பு பயில கல்வி அமைப்புகளில் சேரவும் பிறப்புச் சான்றிதழை இனிமேல் ஒரு அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதன்படி புதிய மசோதா ஒன்று கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் பிறப்புச் சான்றிதழை ஆவணமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது. இதனால் இந்த பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம் வருகின்ற அக்டோபர் 1 ,2023 அன்று முதல் நடைமுறைக்கு வர உள்ளது என அதிகாரப்பூர்வ அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
எனவே இனிமேல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஒரு நபரின் பிறந்த தேதி, பிறந்த இடத்தை நிரூபிக்க ஒரே ஆவணமாக பிறப்புச் சான்றிதழை பயன்படுத்தலாம். அது மட்டும் இல்லாமல் கல்வி நிறுவனத்தில் சேரவும், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண், திருமணப் பதிவு, மற்றும் அரசு பணி நியமனம் உள்பட பல்வேறு பணிகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஒரே அடையாள ஆவணமாக வருகின்ற அக்டோபர் 1 முதல் பயன்படுத்தலாம்.