ஜவான் படத்தில் சலேயா பாட்டுக்கு ஆட முடியவில்லை!!! ஜவான் நிகழ்ச்சியில் நடிகர் ஷாரூக்கானுடன் நடனமாடிய நடிகை தீபிகா படுகோன்!!! இணையத்தில் வீடியோ வைரல்!!!
ஜவான் திரைப்படத்தில் இடம்பெற்ற சலேயா பாடலுக்கு ஜவான் திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகை தீபிகா படுகோன் அவர்கள் நடிகன் ஷாரூக்கான் அவர்களுடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, நடிகை பிரியாமணி, நடிகர் யோகி பாபு, நடிகர் சஞ்சய் தத் மற்றும் பலர் நடித்திருந்தனர். மேலும் நடிகை தீபிகா படுகோன் அவர்கள் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அனிருத் அவர்கள் ஜவான் திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
தற்பொழுது வரை ஜவான் திரைப்படம் உலக அளவில் வசூலில் பல திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 8 நாட்களில் 696 கோடி ரூபாயை ஜவான் திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஜவான் 700 கோடி ரூபாய் வசூலை நோக்கி நெருங்கியுள்ள நிலையில் இன்று(செப்டம்பர்16) அல்லது நாளை(செப்டம்பர்17) 700 கோடி ரூபாயை வசூல் செய்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த வெற்றி விழாவில் ஜவான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சலேயா என்ற பாடலுக்கு ஜவான் திரைப்படத்தின் வெற்றி விழா மேடையில் நடிகர் ஷாரூக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோன் இருவரும் சேர்ந்து நடனமாடினர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மும்பையில் ஜவான் திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று(செப்டம்பர்15) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ஷாரூக்கான், நடிகை தீபிகா படுகோன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மேடையில் சலேயே பாடலை அனிருத் பாடினார். அப்பொழுது அனிருத் அவர்கள் நடிகர் ஷாரூக்கானை நடனமாட மேடைக்கு அழைத்தார்.
இதைத் தொடர்ந்து நடிகர் ஷாரூக்கான் அவர்கள் சலேயே பாடலுக்கு நடனமாட நடிகை தீபிகா படுகோன் அவர்களையும் அழைத்தார். பின்னர் மேடைக்கு வந்த நடிகை தீபிகா படுகோன் அவர்கள் ஷாரூக்கான் அவர்களுடன் சேர்ந்து சலேயா பாடலுக்கு நடனமாடினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜவான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சலேயா பாடலுக்கு நடிகை நயன்தாரா நடனமாடியிருப்பார். தற்பொழுது தீபிகா படுகோன் நடனமாடும் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றது.