யூஜின் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதிப் போட்டி!!! வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!!!
யூஜின் நகரில் நடைபெற்று வந்த டைமண்ட் லீக் தொடரின் இறுதிப் பெட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா அவர்கள் நீண்ட தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
அமெரிக்காவின் யூஜின் நகரில் டைமண்ட் லீக் தொடரின் 14வது சீசன் நடைபெற்று வந்தது. இந்நிலையில் டைமண்ட் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா அவர்களும் இறுதிப் பெட்டிக்கு தகுதி பெற்றார்.
இதையடுத்து டைமண்ட் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா அவர்கள் 83.80 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடம் பிடித்த நீரஜ் சோப்ரா அவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
மேலும் செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஜக்குப் வட்லெஜ்ச் 84.24 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றுள்ளார். பின்லாந்து நாட்டை சேர்ந்த ஆலிவர் ஹேலண்டர் 83.74 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது. மேலும் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா அவர்களுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.