அதிக ஊதியம் பெறும் பிரதமர் இவரா?
சிங்கப்பூர் பிரதமர் தான் நாட்டிலே அதிக ஊதியம் பெரும் தலைவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு என உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் ஏகப்பட்ட பெயர்கள் உள்ளன. அதில் அதிக ஊதியம் பெறும் தேசியத் தலைவர் யார்? என்பது குறித்த ஆய்வை தனியார் அமைப்பு ஒன்று நடத்தியது. அதன் முடிவும் ஆச்சரியமாக உள்ளது.
நாட்டிலுள்ள மக்கள் தொகை விகிதம், நாட்டில் உள்ள பொருளாதார நிலை, சதுர கிலோ மீட்டர் இதன் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் பிற அரசு தலைவர்களுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தான் அதிக சம்பளம் வாங்குவதாக மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகை மதிப்பாய்வின் படி, அவர் ஆண்டுதோறும் சுமார் 2.2 மில்லியன் டாலர்களை சம்பளமாகப் பெறுகிறார். இது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சம்பாதிப்பதை விட அதிகமாகும் 5.5 மடங்கு அதிகமாகும். லீ சியன் லூங், சிங்கப்பூரின் மூன்றாவது மற்றும் தற்போதைய பிரதமரும் ஆவார். இவர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் மூத்த மகன் ஆவார்.
இரண்டாவது இடத்தை ஹாங்காங்கின் 4வது தலைமை நிர்வாகியாக பணியாற்றிய கேரி லாம் பிடித்துள்ளார். அடுத்த இடத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளார்.
மில்லியன் கணக்கில் ஊதிய பெரும் பல்வேறு நாட்டின் அதிபர்கள், இவ்வளவு பணத்தை என்ன செய்வார்கள்? என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவருக்கு அனைத்து தேவைகளையும் அரசு சார்பிலேயே மேற்கொள்ளப்படும். அவரது குடும்பத்தினரின் செலவுகள் அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில் தான் செய்யப்படும். அப்படி இருக்கும் பட்சத்தில் மில்லியன் கணக்கில் ஊதியம் எதற்கு என்று மக்கள் குழம்பிப் போயுள்ளனர்.