51 ரன்களுக்கு சுருண்ட வங்கதேச மகளிர் அணி!!! அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு இந்தியா மகளிர் முன்னேற்றம்!!!
ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிருக்கான டி20 கிரிக்கெட் பிரிவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியும் வங்கதேசம் மகளிர் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச மகளிர் அணியின் பேட்ஸ்வுமென்கள் இந்திய மகளிர் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்க கொடுத்தனர். வங்கதேச மகளிர் அணியில் நைகர் சுல்தானா என்ற வீராங்கனை மட்டுமே இரட்டை கலக்கத்தில் 12 ரன்கள் மட்டும் எடுத்தார்.
மற்ற அனைத்து வீராங்கனைகளும் ஒற்றை இயக்கத்திலும் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேச மகளிர் அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 51 ரன்கள் எடுத்தது. அபாரமாக பந்து வீசிய இந்திய அணியில் பூஜா வஸ்டிராகர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டைடஸ் சது, அமண்ஜோத் கவுர், கயக்வாட், தேவிகா வைத்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து 52 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 8.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 52 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் பெட்டிக்குள் நுழைந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிகஸ் 20 ரன்களும், ஷபாலி வர்மா 17 ரன்களும் எடுத்தனர். வங்கதேச மகளிர் அணியில் மவுரபா அக்தர், ஃபஹிமா காடன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் கிரிக்கெட் பிரிவின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.