உலகக் கோப்பை தொடரில் பாரத் VS பாகிஸ்தான்!!! ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வெளியான விளம்பரத்தால் சர்ச்சை!!!
உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான விளம்பரம் தற்பொழுது ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விளம்பரம் மூலமாக புதிய சர்ச்சை கிளிம்பி உள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்தியா என்ற பெயரை மாற்றி பாரத் என்று பெயர் வைக்கப் போவதாகவும் மசோதா தாக்கல் செய்யப் போவதாகவும் அறிவித்திருந்தது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நிரல், கவர்னர் மாளிகை நிகழ்ச்சி நிரல் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பொழுது இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று ஹிந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை அனைத்தும் நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி அவர்கள் அவருடைய சமூக வலைதளத்தில் பக்கத்தின் முகப்பு புகைப்படத்தில் பாரத் என்னும் குறிப்பிடப்பட்ட புகைப்படத்தை வைத்திருந்தார். மேலும் பாஜக கட்சியினரும் கூட்டணி கட்சியினரும் இதை ஆதரிக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதை எதிர்த்தது. இந்த பிரச்சனை சமீப நாட்களாக பேசப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று(செப்டம்பர்27) வெளியான உலகக் கோப்பை கிரிக்கெட் விளம்பரத்தில் மூலமாக மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
அதாவது உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான விளம்பரம் ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலில் வெளியிடப்பட்டது. இதில் பிரபல தமிழ் நடிகர் பக்ஸ் பகவதி, கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த புரோமோ விளம்பரத்தில் இறுதியில் இந்தியா – பாகிஸ்தான் என்று வருவதற்கு பதிலாக பாரத் – பாகிஸ்தான் என்று ஹிந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று குறிப்பிடப்பட்டது பெரும் சர்சையை கிளப்பி இருக்கின்றது. இதற்கு பலரும் சமூக வலைதளத்தில் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.