டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுவதை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!!

0
101
#image_title

டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுவதை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!!

தமிழ்நாட்டில் ஏராளமான மாவட்டங்களிலும்,மாநிலங்களிலும் டெங்கு காய்ச்சலானது பரவி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் உயிரிழப்பை கூட ஏற்படுத்தக்கூடிய ஒன்று.

டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்த ஆலோசனையில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் கவனக்குறைவாக செயல்பட கூடாது எனவும் உத்தரவிட்டார்.

இந்த டெங்குவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை கருவிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

டெங்குவை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் கண்காணிப்பு ஆய்வக சோதனை நிலையங்கள், நோய் மேலாண்மை, மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றிற்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது என மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

Previous articleஅதிமுகவில் 5 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்!! அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி!!
Next articleதொடர் விடுமுறை காரணமாக ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் பயணம்!!!