தொடர் விடுமுறை காரணமாக ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் பயணம்!!!

0
57
#image_title

தொடர் விடுமுறை காரணமாக ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் பயணம்!!!

தொடர்பு விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து நேற்று(செப்டம்பர்27) ஒரே நாளில் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகள் மூலமாக 1.25 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மிலாடி நபி தினமான இன்று(செப்டம்பர்28) அரசு விடுமுறை நாள் ஆகும். மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் ஆகும். அது மட்டுமில்லாமல் அக்டோபர் 2ம் தேதி திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில் அன்றும் அரசு விடுமுறை ஆகும். இடைப்பட்ட வெள்ளிக் கிழமை மட்டும் வேலை நாள் ஆகும்.

எனவே இந்த ஒருநாள் மட்டும் விடுமுறை எடுத்தால் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையாகும். எனவே இந்த ஐந்து நாள் தொடர் விடுமுறை என்பதால் மக்கள் அனைவரும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது.

அதன் படி சென்னையில் இருந்து வெளியூர்கள் செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் நேற்று(செப்டம்பர்27) இயக்கப்பட்டது.

தொடர் விடுமுறை காரணமாக இரயில் போக்குவரத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் முடிந்துவிட்டதால் மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு அரசு பேருந்துகளை நோக்கி படையெடுத்துள்ளனர். அரசு விரைவு பேருந்துகளிலும், மதுரை, சேலம், திருநெல்வேலி, விழுப்புரம், கும்பகோணம் ஆகிய போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளிலும் நேற்று(செப்டம்பர்27) 25000 மக்கள் பயணம் செய்துள்ளனர்.

நேற்று(செப்டம்பர்27) மாலை வரை பரபரப்பாக காணப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரித்தது. வெளியூர்களுக்கு செல்வதற்கு நள்ளிரவு 1 மணி வரை காத்திருந்த பயணிகளுக்கு போக்குவரத்து அதிகாரிகள் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

முன் பதிவு மட்டும் இல்லாமல் சுமார் 1 லட்சம் மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆக நேற்று(செப்டம்பர்27) ஒரே நாளில் 1.25 லட்சம் பயணிகள் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

நாளை(செப்டம்பர் 29) பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலத்திற்காக பக்தர்கள் செல்வார்கள். இதற்காக இன்று(செப்டம்பர்28) 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு மற்றும் தாம்பரத்தில் இருந்து பக்தர்களின் வசதிக்காக செல்கின்றது.

மேலும் சனி, ஞாயிறு, திங்கள் என்று தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் வருவதால் வெள்ளிக்கிழமை சாந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தென்மாவட்ட ரெயில்களில் ஏற்கனவே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதால் மக்கள் பயணம் செய்வதற்கு ஏதுவான வகையில் போதுமான பேருந்து வசதிகளை செய்வதற்கு போக்குவரத்து கழகங்கள் தயார் நிலையில் இருக்கின்றது.

நாளை(செப்டம்பர்29) அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்காக 20000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான தனியார் ஆம்னி பேருந்துகளிலும் நாளைய(செப்டம்பர்29) பயணத்துக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகிவிட்டது.