எம்ஜிஆரை பின்னாடி கிண்டலடித்த நாகேஷ் – பதிலுக்கு எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா?
தமிழ் சினிமாவில் பழம் பெரும் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நாகேஷ். இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மத்திய அரசு ஊழியராக பணியாற்றினார். சினிமாவின் மேல் இருந்த மோகத்தான் தன்னுடைய மத்திய அரசு வேலையை அவர் விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வந்தார்.
சினிமாவில் கவிஞர் வாலியும், நடிகர் நாகேஷூம் ஒரே அறையில் தங்கிக்கொண்டுதான் சினிமாவில் வாய்ப்பு தேடியுள்ளனர். ஆரம்ப காலக்கட்டத்தில் நாகேஷூக்கு மேடை நாடகங்களில்தான் நடிக்க வாய்ப்பு வந்தது. அதனால், அவர் மேடை நாடகங்களில் நடிக்க துவங்கினார். இதனையடுத்து நாகேஷுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு வந்தது.
இவருடைய காமெடி, நடனம், சுறுசுறுப்பான நடை ஆகியவற்றால் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார் நாகேஷ். எம்ஜிஆர், சிவாஜி, டெல்லி கணேஷன், ஜெய்சங்கர் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். நடிகர்களை விட நாகேஷுக்குத்தான் பட வாய்ப்பு அதிகமாக வந்தது. ஒரு நாளைக்கு 5 படங்களில் நடிக்கும் அளவிற்கு அவர் பிஸியாக இருந்தார். எம்ஜிஆர், சிவாஜி கூட நாகேஷ் வரும் வரைக்கு காத்துக்கொண்டிருப்பார்கள் படப்பிடிப்பு தளங்களில். அந்த அளவிற்கு அவருக்கு அவ்வளவு மவுசு இருந்தது.
ஆனால், நாகேஷ் அனைவரையும் கொஞ்சம் கலைத்துவிடுவார். ஏதாவது விஷயத்தைப் பற்றி துடுக்காகவும் பேசிவிடுவார். அப்படித்தான் ஒரு முறை எம்ஜிஆர் நடிப்பில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை ஜப்பான், மலேசியா, ஹாங்காக் என பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். இப்படத்தில் நாகேஷ் நடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, இப்படத்தைப் பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த நாகேஷ் ‘லட்சம் லட்சமாக செலவழித்து இப்படத்தை எடுக்கிறார்கள். ஆனால், இந்தப் படம் ஓடுமா?’ என்று கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டார்.
இது எப்படியோ எம்.ஜி.ஆரின் காதுக்கு சென்றுவிட்டது. ஆனால் எம்ஜிஆர் அதைப்பற்றி ஒரு துளி கூட நாகேஷிடம் கேட்கவில்லை. படப்பிடிப்பு முடிந்த பிறகு, எடிட்டிங்கை நாகேஷ் வரச்சொல்லி காண்பித்துள்ளார் எம்ஜிஆர். என்ன நாகேஷ் இந்த படம் பற்றி உங்களின் சந்தேகமெல்லாம் தீர்ந்துவிட்டதா?’ என்று கேட்டார். அப்போதுதான் நாகேஷிக்கு தெரிந்தது அய்யோ… நாம் பேசியது எப்படியோ இவர் காதுக்கு போய்விட்டது என்று. அப்படி சிரித்தபடி நழுவி வந்துவிட்டாராம் நாகேஷ்.