யாத்திரையின் பொழுது அண்ணாமலையுடன் செல்பி எடுத்த போலிஸ்காரர்!!! ஒழுங்கு நடவடிக்கை எடுத்த காவல்துறை!!!

0
88
#image_title

யாத்திரையின் பொழுது அண்ணாமலையுடன் செல்பி எடுத்த போலிஸ்காரர்!!! ஒழுங்கு நடவடிக்கை எடுத்த காவல்துறை!!!

என் மண் என் மக்கள் நடைபயணத்தின் பொழுது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்த காவலர் மீது அதிரடியாக ஒழுங்கு நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தின் ஒரு பகுதியாக அண்ணாமலை அவர்கள் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு வந்தார்.

பின்னர் அன்று கூடலூரில் நடைபயணம் மேற்கொண்டார். பின்னர் ஊட்டிக்கு வந்த அண்ணாமலை அவர்கள் சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து எ.டி.சி திடல் வரை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது ஊட்டி காபி ஹவுஸ் சதுக்கத்தில் ஹில்காப் போலிஸ்காரர் கணேசன் அவர்கள் பணியில் இருந்தார்.

பின்னர் அண்ணாமலை அவர்கள் வருவதை பார்த்த போலிஸ்காரர் கணேசன் அவர்கள் கூட்டத்திற்குப் புகுந்து அண்ணாமலை அவர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார். போலிஸ்காரர் கணேசன் அவர்கள் சீருடையுடன் அண்ணாமலை அவர்களுடன் எடுத்த செல்பி புகைப்படம் இணையம் முழுவதும் வைரலாக பரவியது.

அது மட்டுமில்லாமல் பணியில் இருந்த போலிஸ்காரர் கணேசன் அவர்கள் சீருடையுடன் அரசியல் தலைவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிரடியாக போலிஸ்காரர் கணேசன் அவர்களை ஆயுதப் படைக்கு மாற்றி எஸ்.பி பிரபாகர் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

இது குறித்து காவலர்கள் “அரசு பணியாளர்கள் மணிநேரத்தில் அரசுடன் சம்பந்தமில்லாத அரசியல் தலைவர்களுடன் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது என்று விதிமுறை இருக்கின்றது. இந்த விதியை மீறி காவலர் கணேசன் அவர்கள் பாஜக தலைவர் அண்ணாமலையுடன் சேர்ந்து சீருடையுடன் புகைப்படம் எடுத்துள்ளார். எனவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்” என்று கூறினார்.

Previous articleஒரு நிமிடத்திற்கு குறைவாக நடித்து 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!!! செத்து மதிப்பு இவ்வளவு கோடியா!!!
Next articleஇன்றுடன் முடியும் பிரபல விஜய்டிவி சீரியல்!!! சோகத்தில் மூழ்கிய சீரியல் ரசிகர்கள்!!!