ஒரே நேரத்தில் வெளியாகிறதா “விடாமுயற்சி” “விஜய் 68” தல தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட்தான் போங்க!!!
மீண்டும் ஒரே நேரத்தில் வெளி வரவிருக்கிறது தல மற்றும் தளபதி நடிக்கும் படங்கள்.மகிழ்திருமேனி இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் “அஜித்” நடிக்கும் “விடாமுயற்சி”வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் 68 வது படமும் இன்னும் சில தினங்களில் ஒரே நேரத்தில் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளது.இதில் மியூச்சுவல் ஃபேன்ஸ் நிலைமைதான் படுத்திண்டாட்டம்.ஏனெனில் அஜித் பேனாக இருந்தால் அஜித் படத்திற்கு சென்று விடலாம் அல்லது விஜய் பேனாக இருந்தால் விஜய் படத்துக்கு சென்று விடலாம்.ஆனால் இந்த மியூச்சுவல் ஃபேன்ஸ் நிலைமை தான் திண்டாட்டம் ஏனெனில் எந்த படத்தை தேர்ந்தெடுத்து பார்ப்பது FDFSக்கு என்பதுதான் குழப்பமே.
ஏற்கனவே “விஜய்” “அஜித்” நடித்த படங்களான “வாரிசு” மற்றும் “துணிவு” ஒரே நேரத்தில் வெளிவந்து மியூச்சுவல் ஃபேன்ஸ் திண்டாட வைத்தது.அது மட்டுமல்லாமல் “விஜய்” “அஜித்”ரசிகர்களுக்கும் மகிழ்ச்சிதான். “வாரிசு” படம் வெளிவந்த நேரத்திலேயே விஜய் “லியோ” படத்தில் நடித்து முடித்திருந்தார்.”லியோ” அக்டோபர் 19ஆம் தேதி வெளி வரவிருக்கிறது.
இந்நிலையில் “அஜித்”படமான “விடாமுயற்சிக்கு” இயக்குனர் மாற்றம்,ஸ்கிரிப்ட் ரெடி ஆவதில் தாமதம் என பல இடையூறுகள் இருந்தது. இதனால் இப்படம் தயாராவது தள்ளிப்போனது.தற்போது தல அஜித் பட பிரச்னைகளும் சரியான நிலையில் இளையதளபதியின் 68 படமும் அஜித்தின் “விடாமுயற்சி” படமும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளனர்.
இது விஜய் அஜித் ரசிகர்களுக்கிடையே மேலும் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.தளபதி “விஜய்” அவர்கள் நடிக்கும் “விஜய் 68” படமும் அல்டிமேட் ஸ்டார் “அஜித்” அவர்கள் நடிக்கும் “விடாமுயற்சி” படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்பதில் எந்த தயக்கமும் இல்லை.