பழனியில் நாளை முதல் செல்போன், கேமரா கொண்டு செல்ல தடை!!! அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!!!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாளை முதல் அதாவது அக்டோபர் மாதம் முதல் செல்போன், கேமரா ஆகியவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான மலைக் கோயில் திருவிழா சமயங்களில் கூட்டம் அலை மோதும். அந்த சமயம் பழனி கோயிலுக்குள் கருவறையில் உள்ள நவபாஷானத்தினால் செய்யப்பட்ட மூலவர் சிலை, அங்கு உள்ள தங்க கோபுரம், தங்க மயில் மற்றும் முக்கிய மான பகுதிகளில் பக்தர்கள் அனைவரும் புகைப்படம் எடுக்கின்றனர்.
அது மட்டுமில்லாமல் எடுத்த புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிடுகின்றதனர். மலைக் கோயில் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது என்று பல இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இருந்தும் பக்தர்கள் யாரும் அதை கண்டு கொள்ளாமல் செல்போன் மற்றும் கேமரா மூலமாக புகைப்படங்கள் எடுக்கின்றனர்.
அண்மையில் பக்தர்கள் பல பேரும் பழனி கோயிலில் உள்ள நவபாஷானத்தால் ஆன சிலையை புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து பக்தர் ஒருவர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து அந்த பக்தர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு பல அறிவுரைகளை வழங்கியது. இதன் ஒரு பகுதியாக பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் வரும் ஓட்டுநர் 1ம் தேதி முதல் பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் செல்போன் மற்றும் கேமரா போன்ற புகைப்படக் கருவிகளை கொண்டு வருவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
மேலும் கைபேசி, கேமரா கொண்டு வரும் பக்தர்கள் இதற்கு என்று தனியாக வின்ச் கார், ரோப் கார், மடக்கிப் பாதை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் 5 ரூபாய் கொடுத்து ஒப்படைத்துவிட்டு டோக்கான் வாங்கி செல்லவும் தரிசனம் முடிந்து பிறகு செல்போன் மற்றும் கேமராக்களை வாங்கி செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து நாளை அதாவது அக்டோபர் 1ம் தேதி முதல் செல்போன் மற்றும் கேமரா கொண்டு வருவதற்கான தடை அமலுக்கு வருகிறது.