பாகிஸ்தான் வீரர் இந்திய அணி வீரர்களை குறித்து என்ன பேசினார்?வைரலாகும் பதில்கள்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் நடக்கவிருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் உட்பட ஏராளமான அணிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.இதை தொடர்ந்து தற்போது உலகக் கோப்பைக்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது.
பாகிஸ்தான் அணியானது நியூசிலாந்து அணியிடம் மோதி முதலில் தோல்வியை சந்தித்தது. அதற்கு பிறகு நாளை நடைபெறவிருக்கும் பயிற்சி ஆட்டத்தில் பாக்கிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் வீரர் சதாப் கானிடம் இந்திய அணியில் எந்த வீரருக்கு பந்து வீசுவது மிகவும் கடினமான ஒன்றாகும்? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் எந்த தயக்கமும் இன்றி “ரோகித் ஷர்மா” தான் என பதிலளித்தார். ஏனெனில் ரோகித் ஷர்மாவின் பாடிங் திறனை நான் சமீபகாலமாக பார்த்து வருகிறேன்,அவர் தான் என்னை பொறுத்த வரை பயங்கரமான பேட்ஸ்மேன்,அவர் நிலைத்து நின்று ஆடினால் எதிராணிக்கு நிச்சயம் தோல்வி தான் கிட்டும் எனக் கூறினார்.
இதனை தொடர்ந்து இந்திய அணியின் பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் அவர்களை எதிர்கொள்வது மிக மிக கடினம் என்றும்,ஏனெனில் குல்தீப் யாதவ் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர். இவரை சமாளிப்பது மிக கடினமான ஒன்று. என பாகிஸ்தான் வீரர் சதாப் கான் கூறியுள்ளார்.
இவரது இந்த பதில் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.