உங்களுடைய அன்பு மற்றும் வாழ்த்துக்களுடன் இன்று தொடங்கியது!!! தளபதி68 பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு டுவீட்!!!

0
39
#image_title

உங்களுடைய அன்பு மற்றும் வாழ்த்துக்களுடன் இன்று தொடங்கியது!!! தளபதி68 பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு டுவீட்!!!

நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள 68வது படமான தளபதி68 படத்தை பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லியோ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அவருடைய 68வது படமான தளபதி68 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைக்கவுள்ளார்.

மேலும் தளபதி 68 திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தளபதி68 திரைப்படம் குறித்து பல அறிவிப்புகள் இணையத்தில் பரவி வருகின்றது. அதாவது தளபதி 68 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும், தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு பற்றியும் பல தகவல்கள் இணையத்தில் பரவி வந்தது.

இதையடுத்து இன்று(அக்டோபர்2) தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய இருப்பதாகவும் படப்பிடிப்பு நாளை(அக்டேபர்3) முதல் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது. இதையடுத்து தளபதி68 திரைப்படத்தை இயக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் அந்த தகவலை எக்ஸ் பக்கம் வாயிலாக உறுதி செய்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு “உங்களின் அன்பு மற்றும் வாழ்த்துக்களுடன் தளபதி68 திரைப்படம் இன்று(அக்டோபர்2) முதல் தொடங்கியுள்ளது. இது ஒரு ஃபேன் நிறைந்த ரோலர் கோஸ்டர் ரைடாக இருக்கப் போகின்றது. தளபதி68 திரைப்படத்தின் புகைப்படங்கள் மற்றும் அப்டேட்டுகள் அனைத்தும் நம்ம லியோ திரைப்படத்தின் ரிலீஸ்க்கு பிறகுதான்” என்று பதிவிட்டு ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.