நடிகை ஸ்ரீதேவி இறந்ததற்கு இதுதான் காரணம்!!! வெளிப்படையாக பேசிய போனி கபூர்!!!

0
96
#image_title

நடிகை ஸ்ரீதேவி இறந்ததற்கு இதுதான் காரணம்!!! வெளிப்படையாக பேசிய போனி கபூர்!!!

நடிகை ஸ்ரீதேவி இறப்புக்கு உண்மையான காரணம் குறித்து பிரபல தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவி அவர்களின் கணவருமான போனி கபூர் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீதேவி அவர்கள் 1996ம் ஆண்டு தயாரிப்பாளர் பழனி கபூர் அவர்களை திருமணம் செய்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை ஸ்ரீதேவி 2012ம் ஆண்டு வெளியான இங்கிலீஷ் விங்கீலிஸ் என்ற திரைப்படம் மூலமாக மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

அதன் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான புலி திரைப்படத்தில் நடித்தார். இதை அடுத்து தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்த நடிகை ஸ்ரீதேவி அவர்கள் 2018ம் ஆண்டு துபாயில் உள்ள வீட்டில் குளியல் தொட்டியில் இறந்தபடி சடலமாக மீட்கப்பட்டார்.

நடிகை ஸ்ரீதேவி அவர்களின் இந்த மர்மமான மறைவு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் சந்தேகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனால் துபாய் காவல் துறையினரின் விசாரணைக்கு தயாரிப்பாளர் போனி கபூர் ஆளானார். இதையடுத்து ஸ்ரீதேவி அவர்களின் மரணம் ஒரு விபத்து என்பதை மருத்துவர்கள் உறுதிபடுத்தினர். இதையடுத்து நடிகை ஸ்ரீதேவி அவர்களின். உடல் மும்பைக்கு கொண்டுவரப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி அவர்கள் மறைந்து 6 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் அவரது இறப்பு குறித்து தயாரிப்பாளர் பழனி கபூர் அவர்கள் பேசியுள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலுக்கு பேட்டி அளித்த தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் “ஸ்ரீதேவி அவர்கள் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக உண்ணும் உணவுகளில் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்வார். குறிப்பாக எங்களுக்கு திருமணம் ஆவதற்கு முன்பு இருந்தே உப்பு இல்லாத அதாவது உணவில் உப்பு சேர்க்காமல் தான் சாப்பிடுவார்.

உப்பு சேர்க்காமல் உப்பு இல்லாத உணவு வகைகளை சாப்பிட்டதால் நடிகை ஸ்ரீதேவிக்கு குறைந்த இரத்த அழுத்தம் பாதிப்பு இருந்தது. குறைந்த இரத்த அழுத்தம் இருபதனால் நடிகை ஸ்ரீதேவிக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படும். எங்களின் திருமணத்திற்கு பிறகும் இதுபோல பலமுறை நடந்துள்ளது.

நாங்கள் குழந்தைகளுடன் வெளியில் உணவு சாப்பிட சென்றாலும் நடிகை ஸ்ரீதேவி அவர்கள் உப்பு இல்லாத உணவை மட்டுமே சாப்பிடுவார். ஏற்கனவே குறைந்த இரத்த அழுத்தத்தினால் அடிக்கடி மயக்கம் ஏற்படும். அவ்வாறு விழிப்பு நிலையை இழந்ததால் குளியல் தொட்டிக்குள் மூழ்கி ஸ்ரீதேவி உயிரிழந்தார்.

இதையடுத்து துபாய் காவல் துறையினர் என்னை பல கோணங்களில விசாரணை செய்தனர். ஏன் உண்மையை கண்டறியும் சாதனையும் எனக்கு செய்யப்பட்டது. மருத்துவர்கள் இது விபத்துதான் என்று உறுதி செய்யும் வரை நான் துபாய் காவல் துறையினரின் விசாரணை வளையத்தில் தான் இருந்தேன்.

ஸ்ரீதேவி அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு நடிகர் நாகார்ஜுனா அவர்கள் வந்திருந்தார். அப்பொழுது அவர் என்னிடம் நடிகை ஸ்ரீதேவி என்னிடன் ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அப்பொழுது நடிகை ஸ்ரீதேவியின் ஒரு பல் உடைந்தது” என்று நினைவு கூறினார். குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக அப்பொழுது இருந்தே இந்த பிரச்சனை ஸ்ரீதேவிக்கு இருந்துள்ளது” என்று அவர் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

Previous articleகலைஞர் மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்?வெளியான முக்கிய தகவல்கள்!!!
Next articleஇரண்டு பேரால் காப்பாற்றப்பட்ட இந்திய அணி!! 202 ரன்கள் குவித்தது எப்படி?