கலைஞர் வசனத்தில் நடிக்க மறுத்த ரஜினி – வெளியான தகவல்!
தமிழ் சினிமாவில் நட்சத்திர சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் நடிப்பில் தனக்கென்று வழி வகுத்து ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தார். இவர் ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய ஸ்டைல், நடிப்புத் திறமையைப் பார்த்த இவரது நண்பர்கள் ரஜினியை திரைப்பட கல்லூரியில் சேர்த்தனர். அங்கு ரஜினிகாந்த் நல்ல முறையில் நடிப்பை கற்றார்.
இதன் பின்பு, ஒருமுறை இயக்குநர் பாலச்சந்தர் ரஜினியைப் பார்த்துள்ளார். ரஜினியுடன் நடிப்பும், ஸ்டைலும் பிடித்துப் போக, தான் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் ரஜினியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
இதனையடுத்து, தொடர்ச்சியாக ரஜினி நடிக்க ஆரம்பித்தார். பட வாய்ப்புகள் ரஜினி வீட்டு கதவை தட்ட ஆரம்பித்தன. கண்டக்டராக சாதாரண வாழ்க்கையை தொடங்கிய ரஜினி வாழ்க்கை மொத்தமாக மாறி இன்று உலகம் அறியும் சிறந்த நடிகராக விண்ணைத் தொட்டுள்ளார் ரஜினிகாந்த்.
சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ரஜினி பற்றியும், கலைஞர் கருணாநிதியைப் பற்றி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
அது என்னவென்றால், ரஜினிக்கும், கருணாநிதிக்கும் இடையே நல்ல நட்பு இருந்துள்ளது. ரஜினி சில தேர்தல்களில் கலைஞருக்கு ஆதரவாகவும் பேசியுள்ளது. ஆனால், 1980ம் ஆண்டு ரஜினி ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்திற்கு கலைஞர் வசனம் எழுதுவதாக இருந்தது. ஆனால், ரஜினி கலைஞர் வசனத்தில் பேசி நடிக்க மறுத்தார். இது குறித்து கலைஞரையே அவர் நேரில் சந்தித்து பேசினார். ரஜினியின் தயக்கத்தை புரிந்துக் கொண்ட கலைஞர், தயாரிப்பாளரை அழைத்து இப்படத்தில் நான் வசனம் எழுத நேரமில்லை என்று காரணத்தை கூறி சமாளித்து விட்டாராம். ஆனால், ரஜினிக்கு தர்மசங்கடமாக போய்விட்டதாம்.