உடன்குடி பனைசார் பொருட்களுக்கு புவிசார் குறியீடு!விவசாயிகள் அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்!!

0
123
#image_title

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடி என்ற ஊரில் செய்யும் கருப்பட்டி அல்லது பனைவெல்லமானது உலகப் பிரசித்திபெற்றது.  தமிழக அரசு உடன்குடி பனைவெல்லத்திற்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இதன்மூலம் இங்கு செய்யும் பனங்கருப்பட்டி மற்றும் பனை சார் பொருட்களுக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்குமெனவும், இப்போருட்களின் விற்பனை பெருகுமெனவும் கூறி [பனைவிவசாயிகள் பனைசார் கைவினை ப்பொருட்கள் செய்யும் தொழிலாளர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து உடன்குடி பனை விவசாயி சங்கம் மற்றும் பனங்கற்கண்டு நல அமைப்பினர்களின் முயற்சியால் இங்கு செய்யப்படும் பனைவெல்லத்தின்  தரத்தினை கண்டறிய உணவு பாதுகாப்புத்துறை வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உடன்குடி கருப்பட்டிக்கு அரசு புவிசார் குறியீடு வழங்கி பெருமைபடுத்தியுள்ளது.நபார்டு வங்கிகியின் மூலம் பனங்கற்பட்டி நல அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதற்கு உடன்குடி கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கம் அரசுக்கு நன்றி தெறிவித்துள்ளனர்.

நிலைமை இப்படியிருக்க உடன்குடி மற்றும் அதனைச்சுற்றியுள்ள 7 கிராமங்களில் 6000 குடும்பங்கள் இப்பனை மர விவசாயத்தை மட்டுமே  நம்பியுள்ளனர்.இவ்வாண்டு பருவ மழை பெய்யாது போன நிலையில்  ஆயிரக்கணக்கான பனைமரங்கள் பட்டுப் போகும் தருவாயில் உள்ளன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி உடன்குடியை  சேர்ந்த பனைமரநல சங்கத்தினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Previous articleதிலக் வர்மாவின் நெகிழ்வு பூர்வமான கொண்டாட்டம்! காரணம் என்ன ?
Next articleவிஜய் ரசிகர்களே உங்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெளியாகியுள்ளது!