அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் நவம்பர் 2 தேதி எஸ்ஏஇஎஸ் திறனறி தேர்வு!!

0
142
New arrangements for students who wrote the supplementary exam!! Important announcement released by the Department of School Education!!
New arrangements for students who wrote the supplementary exam!! Important announcement released by the Department of School Education!!

“கல்வி கண்போன்றது” என்ற முதுமொழியை நன்குணர்ந்த நமது தமிழக அரசானது மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு சாதனம் தொடர்பான அறிவினை வளர்த்திட  ஐஐடிஎம்(IITIM)நிறுவனத்துடன் இணைந்து 250 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மின்னணு சாதனம் தொடர்பான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இதுமட்டுமன்றி அரசு பள்ளியின் வகுப்பறை தரத்தை மேம்படுத்துவது.தூய்மையான குடிநீர்,காற்றோட்டமான வகுப்பறைகள்,சுகாதாரமான கழிவறைகள் போன்ற அடிப்படை தேவைகளையும் மேம்படுத்தி வருகிறது.

அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமும் அறிமுகம் செய்துள்ளது.இதனால் காலை உணவை தவிர்க்கும் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும்.சிறப்பான திட்டமான “இல்லம் தேடி கல்வி”போன்ற திட்டங்கள் .”நம் பள்ளி நம் பெருமை” போன்ற திட்டங்கள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும்.
“நான் முதல்வன்” என்ற திட்டத்தின் வாயிலாக உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டமும்.அரசு பள்ளி மாணவர்கள் மேற்படிப்பை படிக்க ஊக்குவிக்கும் திட்டமாகும்.

இதுபோல் மாணவர்களின் திறனை சோதிக்கும் வகையில் எஸ்ஏஇஎஸ் என்ற தேர்வினை நடத்தி அதன்மூலமாக ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.இத்தேர்வு மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க நடத்தப்படும் தேர்வாகும்.அந்தவகையில் 2,3 மற்றும் 9  வகுப்பு மாணவர்களுக்கு இத்தேர்வினை வரும் நவம்பர் மாதம் 2ம் தேதி அரசு நடத்தவுள்ளது.இத்தேர்வினை 7.42  இலட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.;இத்தேர்வில் 20,000  பள்ளிகள் கலந்து கொள்ளபோகின்றது.இதில் ,மாவட்டத்திற்கு ஒருவர் என 1,356 மாணவர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கபடவுள்ளனர்.என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

Previous articleடெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கக்கோரி அ.தி.மு.க வினர் போராட்டம்!
Next articleதமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும் பிரபல விளையாட்டு வீராங்கனை!!! அதுவும் எந்த படத்தில் நடிக்கிறார் என்று தெரியுமா!!?