பணியிடம்: சேலம்.. தமிழக அரசின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் அசத்தல் வேலை!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் அக்டோபர் 15!!
தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில்(One Stop Centre – OSC) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதன்படி “Case Worker” பணிக்கு தகுதி இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் தபால் வழியாக வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வேலை வகை: தமிழக அரசு வேலை
நிறுவனம்: ஒருங்கிணைந்த சேவை மையம்(One Stop Centre – OSC)
பதவி: Case Worker
பணியிடம்: சேலம்
காலிப்பணியிடம்: மொத்தம் 01
கல்வித் தகுதி: Case Worker பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் B.Sc,M.Sc படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: Case Worker பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்: Case Worker பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் (Interview)
விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி
Case Worker பணிக்கு தகுதியும்,விருப்பமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://salem.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.பின்னர் அதை பூர்த்தியிட்டு முறையான ஆவண நகலுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இணையதள முகவரி: https://salem.nic.in/
முகவரி:
District Social Welfare Office,Collectorate Campus,Room No: 126,Salem – 636001.
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 15-10-2023