நடிகர் திலகம் சிவாஜிக்கே நடிப்பு சொல்லிக்கொடுத்த விஜய்.. – அப்பாகிட்ட நல்லா திட்டுவாங்கின தளபதி!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழில் ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் தான் இயக்கும் படங்களில் நடிகர் விஜய்யை சின்ன வயதிலிருந்தே நடிக்க வைத்தார்.
அன்றிலிருந்து இன்று வரை தன் விடாமுயற்சியால் விஜய் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று தமிழ் சினிமாவில் சாதனைப் படைத்து வருகிறார்.
நடிகர் விஜய்க்கு நல்ல அடையாளத்தை கொடுத்த படம் ‘காதலுக்கு மரியாதை’. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனால், விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் சேர ஆரம்பித்தது.
இதன் பின் ‘பூவே உனக்காக’, ‘பிரியமானவளே’ உட்பட பல படங்களில் நடித்து தனது வெற்றியை நிலைநாட்டினார்.
தற்போது நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் 19ம் தேதி வெளியாக உள்ளது. விஜய்யின் இப்படத்தை அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், நடிகர் விஜய், நடிகர் திலகம் சிவாஜிக்கே நடிப்பு சொல்லிக்கொடுத்ததாக தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது, 1997ம் ஆண்டு நடிகர் விஜய், நடிகை சிம்ரன் நடிப்பில் ‘ஒன்ஸ்மோர்’ படம் வெளியானது. இப்படத்தில் விஜய்யுடன் சிவாஜி கணேசன் இணைந்து நடித்தார். இப்படத்திற்காக எஸ்.ஏ.சந்திரசேகர் சிவாஜியை அணுகி என் மகனுடன் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று கேட்க, அதற்கு சிவாஜியும் ஒப்புக்கொண்டார். இப்படத்தில் சரோஜாதேவியிடம் தன்னை ஸ்மார்ட்டாக காட்டுவதற்காக ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி-சர்ட் என தனது உடையமைப்பை மாற்றுவார்.
அப்போது, விஜய், சிவாஜிக்கு ஜீன்ஸ் பேண்ட் போட்டால் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று கூறினாராம். இதைப் பார்த்த சந்திரசேகர் விஜய்யை பார்த்து ஒரு முறை முறைத்தாராம். அதற்கு சிவாஜி, விஜய்யிடம்… தம்பி எப்படி நடக்க வேண்டும் என்று கொஞ்சம் சொல்லித்தாங்கப்பா… என்று கேட்டாராம். அதன் பிறகு விஜய்யும் நடந்து காட்டினாராம். இதைப் பார்த்த சந்திரசேகர் விஜய்யை தனியே அழைத்து திட்டினாராம். இதைக் கேட்ட சிவாஜி… என்னப்பா… தம்பியை திட்டுற… அவனை திட்டாதே…. அவன் வருங்காலத்தில் மிகப்பெரிய நடிகனாக வருவான் என்றாராம். அவர் கூறியது போல் விஜய் முன்னணி ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார்.