எதிர்பார்ப்பை உருவாக்கி ஏமாற்றத்தை அளித்த பார்ட் 2 திரைப்படங்கள்!!! இந்த படத்த எதிர்பார்க்கவே இல்லையே!!!
தற்போதைய காலத்தில் சினிமா பார்க்கும் அனைவரும் பெரிய ஹீரோ, பெரிய இயக்குநர் என்று யாரும் பார்த்து படத்தை பார்க்க பொது கிடையாது. கொடுத்த டிக்கெட் விலைக்கு படம் பொழுதுபோக்காக இருந்ததா இல்லையா என்பதை மட்டுமே மக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
அந்த வகையில் சில படங்களை ரசிகர்கள் பலரும் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் பெரும் வரவேற்பு கொடுத்து வெற்றியடைய வைத்து விடுவார்கள். அதுவே மக்களை என்டர்டெய்ன்மெண்ட் செய்யாத பெரிய படமாக இருந்தாலும் அதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காது. அதே சமயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறாத திரைப்படங்கள் அனைத்தும் அடைந்த படங்கள் தான்.
அந்த வகையில் பல திரைப்படங்கள் னசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கி விடும். டீசர், டிரெய்லர் என அனைத்திலும் எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டு படத்தை பார்க்கும் பொழுது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கக் கூடிய திரைப்படங்கள்தான் தற்பொழுது அதிகளவில் வெளியாகின்றது. அந்த வகையில் எதிர்பார்ப்புகளை உருவாக்கி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த பார்ட் 2 திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.
ஜித்தன் 2…
நடிகர் ரமேஷ் நடிப்பில் இயக்குநர் ராகுல் பிரம்மஹம்சா இயக்கத்தில் 2005ம் ஆண்டு ஜித்தன் திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படம் தான் நடிகர் ரமேஷ்க்கு முதல் திரைப்படம். அன்றிலிருந்து இன்று வரை ஜித்தன் ரமேஷ் என்றே அழைக்கப்படுகின்றார். இவருக்கு ஜித்தன் திரைப்படம் தான் ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் கொடுத்தது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து இதன் இரண்டாவது பாகத்தில் நடித்து மீண்டும் ஒரு அங்கீகாரத்தை பெறலாம் என்ற முடிவோடு நடித்தார். ஆனால் ஜித்தன் 2 திரைப்படம் எப்பொழுது வெளியானது என்று தெரியவில்லை. மேலும் இந்த திரைப்படம் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஜெய்ஹிந்த் 2…
நடிகர் அர்ஜூன் இயக்கி அவரே நடித்து 1994ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெய்ஹிந்த். இந்த திரைப்படம் அந்த சமயத்திலும் மக்கள் அனைவராலும் பேசப்பட்டது. ஜெய்ஹிந்த் திரைப்படத்தை மக்கள் உணர்வுப்பூர்வமாக கொண்டாடி வெற்றி பெற வைத்தார்கள். இந்நிலையில் நடிகர் அர்ஜூன் அவர்கள் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி அவரே தயாரித்து அதில் அவரே நடிக்கவும் செய்தார். ஜெய்ஹிந்த் 2 திரைப்படம் 2012ம் ஆண்டு வெளியானது. ஆனால் ஜெய்ஹிந்த் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு போல ஜெய்ஹிந்த் 2 திரைப்படத்திற்கு கிடைக்கவில்லை. ஜெய்ஹிந்த் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடா என்று மூன்று மொழிகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்து மண்ணை கவ்விய ஜெய்ஹிந்த் 2 திரைப்படம் கன்னட மொழியியல் சிறந்த திரைப்படத்திற்கான மாநில திரைப்பட விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
வெண்ணிலா கபடிக்குழு 2…
நடிகர் விஷ்ணு விஷால், சூரி, சரண்யா மோகன் என்று பலர் நடித்து 2009ம் ஆண்டு வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் நடிகர்கள் விக்ராந்த், பசுபதி ஆகியோரது நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு 2 திரைப்படம் எதிர்பார்ப்புகளை மட்டும் உருவாக்கி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
திருட்டுப் பயலே 2…
2006ம் ஆண்டு இயக்குநர் சுசி கணேசன் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா, அப்பாஸ் ஆகியோரது நடிப்பில் திருட்டுப் பயலே திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து திருட்டுப் பயலே திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2017ம் ஆண்டு வெளியானது. ஆனால் இந்த திரைப்படத்திற்கு விமர்சனம் ரீதியாக வரவேற்பு கிடைத்தாலும் வசூல் ரீதியாக பெரும் அடி வாங்கியது.
கே.ஜி.எப் 2…
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் 2018ம் ஆண்டு கன்னட மொழியியல் கே.ஜி.எப் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. வசூல் ரீதியாக வெற்றி பெற்ற தியைப்படமாக இருந்தாலும் விமர்சனங்கள் ரீதியாக கே.ஜி.எப் 2 திரைப்படம் வெற்றி பெறவில்லை.
பொன்னியின் செல்வன் 2…
இந்த வரிசையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் என்று. எதிர்பார்க்கவில்லை. இந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மக்களின் எதிர்பார்ப்புகளை தூள் தூளாக்கி கலவையான விமர்சனங்களை பெற்றது.