82 வயது மனைவியை விவாகரத்து செய்ய மனு அளித்த  89 வயது கணவர்!!! அதிர்ச்சி கொடுத்த சுப்ரீம் கோர்ட்!!! 

0
82
#image_title
82 வயது மனைவியை விவாகரத்து செய்ய மனு அளித்த  89 வயது கணவர்!!! அதிர்ச்சி கொடுத்த சுப்ரீம் கோர்ட்!!!
82 வயதாகும் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று 89 வயதாகும் கணவர் சுப்ரீம் கோர்ட்டில் விவாகரத்து மனு அளித்தார். இதையடுத்து அந்த 89 வயதான கணவருக்கு சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி அளித்துள்ளது.
இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 89 வயதான முதியவர் ஒருவர்தான் இப்பொழுது இந்த மனுவை அளித்துள்ளார். இவருக்கு 1963ல் திருமணமான நிலையில் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இதையடுத்து 1982ம் ஆண்டு சென்னையில் ராணுவ வீரராக பணியாற்றத் தொடங்கிய பொழுது இந்த தம்பதியினர் இடையே விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து விவாகரத்து கேட்டு மனு அளித்ததால் மாவட்ட கார்ட் அனுமதி கொடுத்தது. ஆனால் பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றம் மாவட்ட கோர்ட் அளித்த உத்தரவை ரத்து செய்தது.
இதையடுத்து 89 வயது கணவர் 82 வயது மனைவியிடம் விவாகரத்து கோரி சுப்ரீம் கோர்டில் மனுத் தாக்கல் செய்தார். கணவர் அளித்த மனுவுக்கு மனைவி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனைவி தாக்கல் செய்த மனுவில் “என்னுடைய கணவரை கவனித்துக் கொள்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன். அவரை பிரிந்து செல்லும் திட்டம் எனக்கு இல்லை. இந்த வயதில் விவாகரத்து பெற்று சாவதற்கு நான் விரும்பவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அணிருத்தா போஸ், பேலா திரிபாதி ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் 89 வயதான கணவர் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து கணவருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
Previous article5 ஆண்டுகள் கழிந்து மீண்டும் தமிழகம் வரும் சோனியா காந்தி!!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று வரவேற்பு அளிக்கவுள்ளதாக தகவல்!!!
Next articleஉலக பார்வை தினம் 2023!!! 2 மணிநேரம் கண்களை இமைக்காமல்  சாதனை படைத்த மாணவி!!!