நூற்றாண்டுகால கோரிக்கை நிறைவேறியது!!! ஒலிம்பிக்கில் கிரிக்கெட் பெட்டியை சேர்க்க ஒப்புதல்!!! 

0
101
#image_title
நூற்றாண்டுகால கோரிக்கை நிறைவேறியது!!! ஒலிம்பிக்கில் கிரிக்கெட் பெட்டியை சேர்க்க ஒப்புதல்!!!
நூற்றாண்டுகளாக கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டி கோரிக்கை வைத்து வந்த நிலையில் 2028ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க ஒலிம்பிக் கமிட்டி குழு ஒப்புதல் அளித்து உள்ளது.
உலக அளவில் நடக்கும் பெரிய விளையாட்டு பேட்டிகளில் ஒலிம்பிக் போட்டியும் ஒன்று. இந்நிலையில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டையும் சேர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. கடைசியாக 1900ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டி இடம் பெற்று இருந்தது.
அதற்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டு இருந்து வந்தது. இந்நிலையில் நீண்ட காலமாக ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற நூற்றாண்டுக் கோரிக்கைக்கு தற்பொழுது வெற்றி கிடைத்துள்ளது.
2028ம் ஆண்டு அமெரிக்கா நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் மும்பையில் தாமஸ் பாக் தலைமையில் நேற்று(அக்டோபர்12) தொடங்கியது. இந்நிலையில் இந்த ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பதாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அதாவது ஒலிம்பிக் போட்டியில் டி20 வடிவிலான கிரிக்கெட் போட்டிகள் சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. கிரிக்கெட் மட்டுமில்லாமல் பேஸ்பால், சாப்ட்பால், ஸ்குவாஷ், பிளாக் புட்பால் ஆகிய போட்டிகளும் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 2028ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீரர்கள் ரஷ்ய நாட்டின் கொடி இல்லாமல் தனிப்பட்ட முறையில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
Previous articleஏழை எளிய மக்களுக்கான வந்தே பாரத் ரயில் இப்படித்தான் இருக்கும்!!! மத்திய ரயில்வே அமைச்சர் சமூகவலைதளத்தில் பதிவு!!!
Next articleஎந்த டியூனுமே சரியில்லை என்று கூறி நிராகரித்த எம்ஜிஆர் – கடுப்பான எம்.எஸ்.விஸ்வநாதன்!