ஏழை எளிய மக்களுக்கான வந்தே பாரத் ரயில் இப்படித்தான் இருக்கும்!!! மத்திய ரயில்வே அமைச்சர் சமூகவலைதளத்தில் பதிவு!!!

0
37
#image_title

ஏழை எளிய மக்களுக்கான வந்தே பாரத் ரயில் இப்படித்தான் இருக்கும்!!! மத்திய ரயில்வே அமைச்சர் சமூகவலைதளத்தில் பதிவு!!!

ஏழை எளிய மக்கள் பயணம் செய்வதற்கு ஏசி வசதி இல்லாத வந்தே பாரத் ரயில் இப்படித்தான் இருக்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவி அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏசி வசதி இல்லாமல் ஏழை எளிய மக்கள் பயணிக்கும் வகையில் வந்தே பாரத் ரயிலின் 22 பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த வந்தே பாரத் ரயில் அக்டோபர் மாதம் இறுதியில் சேவையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ரயிலின் லோகோ பெட்டிகள் தயாரிக்கும் பணி ஐ.சி.ஏஃப் தொழிற்சாலையில் நடைபெற்று வருகின்றது.

இந்திய நாட்டின் அதிவேகமாக செல்லக் கூடிய ரயிலாக வந்தே பாரத் ரயில் தற்பொழுது இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வந்தே பாரத் ரயில் கட்டணம் ஏழை எளிய மக்கள் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் இல்லை. இதையடுத்து ஏழை எளிய மக்களும் அதிவேக ரயிலில் பயணம் செய்யும் வகையில் ‘புஷ் புல்’ என்னும் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டம்மிட்டு உள்ளது.

வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யும் பொழுது கிடைக்கும் அதே அனுபவத்தை தரும் வகையில் இந்த புஷ் புல் ரயில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயிலில் 1800 பயணிகள் பயணிக்கும் வகையில் அதிகபட்சம் 130 கிலோ மீட்டர் வேகம் செல்லக் கூடிய வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

மேலும் ஏசி வசதி அல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டு வரும் இந்த வந்தே பாரத் ரயிலில் குறைவான கட்டணத்துடன் முன்பதிவு செய்ய முடியாத வசதி கொண்டு சாதாரண மக்கள் பயணிக்கும் வகையில் இயக்கப்படவுள்ளது. மேலும் இந்த வந்தே பாரத் ரயிலில் சிறப்பான படுக்கை வசதி, அதிநவீன விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த மாதம் அதாவது அக்டோபர் மாதம் இறுதிக்குள் புஷ் புல் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கவுள்ளது. எல்.எச்.பி பெட்டிகளுடன் இரண்டு புறமும் மின்சார இன்ஜின்களுடன் இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த புஷ் புல் வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில் நடைபெற்று வருகின்றது.

இந்த புஷ் புல் வந்தே பாரத் ரயிலுக்கான பிரத்யேக லோகோ தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த புஷ் புல் வந்தே பாரத் ரயிலுக்கான இன்ஜின் தயாரிப்பு பணிகள் மேற்கு வங்க மாநிலத்தில் சித்தரஞ்சன் லோகோமேட்டிவ் ஒர்க்ஸ் ஆலையில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் புஷ் புல் ரயில் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள் சமூக வலைதளத்தில் பக்கத்தில் “புஷ் புல் ரயிலுக்கான லோகேஷ் தயாரிப்பு பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதில் புஷ் புல் லோகோ இணைக்கப்பட்டவுடன் அதிக அளவிலான பவர் ஜெனரேட்டர் போன்ற எதுவும் தேவைப்படாது” என்று பதிவிட்டுள்ளார்.