ரசிகையின் பெயரை தன் குழந்தைக்கு வைத்த ரகுமான் – வெளியான சுவாரஸ்ய தகவல்!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரகுமான். இவர் புதுபுது அர்த்தங்கள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார்.
ரகுமான் ‘கண்ணே கனியமுதே’, ‘வசந்த ராகம்’, ‘அன்புள்ள அப்பா’ ஆகிய படங்களில் நடித்தார்.
கே.பாலச்சந்தர் இயக்கிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தின் தன்னுடைய அசத்தான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இதற்கிடையில், கார்த்திக் நரேனின் ‘துருவங்கள் பதினாறு’ படம் இவருக்கு நல்ல திருப்புனை திரைப்படமாக அமைந்தது.
இவர் கடத்த 1993ம் ஆண்டு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானுவின் சகோதரி மெஹ்ருன்னிஸா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில், ஒரு சேனலுக்கு ரகுமான் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் தன் மனைவி குறித்து பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ஒரு நிகழ்ச்சியில் நான் மெஹ்ருன்னிஸாவை பார்த்தேன். அப்போது திருமணம் செய்தால் இவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்படியே அவரை நான் கல்யாணம் செய்தேன். நான் ஒரு தடவை ஸ்ரீலங்காவில் படப்பிடிப்பிற்கு சென்றேன். அங்கு எனக்கு ஒரு தீவிர ரசிகை இருந்தார். அந்த ரசிகை என்னை எப்படியாவது பார்த்தாகவேண்டும் அவருடைய பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார். அந்த ரசிகையின் பெற்றோர் என்னிடம் வந்து மகளின் ஆசையை கூறினார்கள்.
ஒரு நாள் நான் அந்த ரசிகையின் வீட்டிற்கு இரவு விருந்துக்கு சென்றேன். எனக்கு ஒரே ஷாக்காகிவிட்டது. பாத்ரூம், வீடு முழுதும் என் புகைப்படங்களைத்தான் ஒட்டி வைத்திருந்தார். என்னை வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று இருந்தார். அப்போ நான் அந்த ரசிகையிடம் பேசி திருமணம் செய்து கொள்ளும்படி கூறினேன். இப்படிப்பட்ட ரசிகைக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு பிறக்கும் குழந்தைக்கு அந்த ரசிகையின் பெயர் வைக்கலாம் என்று என் மனைவியிடம் சொன்னேன். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார். எனக்கு பிறந்த குழந்தைக்கு அந்த ரசிகையின் பெயர் வைத்துவிட்டேன்.