ராகுல் காந்தி ஒரு ஞான சூன்யம் : கேப் விடாமல் கலாய்க்கும் ஹச்.ராஜா..!!

Photo of author

By Parthipan K

கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளில்‌ விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. இந்த தகவலை பார்த்த ராகுல் காந்தி உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

ராகுல் காந்தி கூறியதாவது ‘பாஜகவினர் சப்தம் இல்லாமல் பல கோடி கடன்களை தள்ளுபடி செய்து நாட்டு மக்களுக்கு துரோகம் செய்ததாக’ கூறியிருந்தார். இதை பார்த்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரிசையாக ட்விட்களை போட்டு விளக்கம் கொடுத்தார்.

இப்படி ஒரு குழப்பம் ஏற்பட காரணம் சில நாட்களுக்கு முன்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்கள் பெறப்பட்டள்ளது. அதில் விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட பலரிடம் இருந்து வர வேண்டிய கடன்கள் தள்ளி வைக்கப்பட்டதாக தெரியவந்தது.

இந்த தகவலை தவறாக புரிந்து கொண்ட சிலர் பல ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்ததாக பரப்பி விட்டனர். இந்த குழப்பத்தை தீர்க்கும் சாக்கில் ஹச்.ராஜா ராகுல் காந்தி ஒரு ஞான சூன்யம் என்று கலாய்த்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

https://twitter.com/HRajaBJP/status/1256255673664339968?s=19