பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய தமிழக அரசு – இன்று முதல் அமல்

0
146

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய தமிழக அரசு – இன்று முதல் அமல்

அரசு வருவாயைப் பெருக்கம் பொருட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்துவதாகத் தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அதன் படி பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை 28லிருந்து 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரியை 20லிருந்து, 25 சதவீதமாகவும் உயர்த்தப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை, தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதனால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 3.26 ரூபாயும், டீசல், 2.51 ரூபாயும் அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 72.28 ரூபாயாக இருந்த பெட்ரோலின் விலை 75.54 ரூபாயாகவும், ரூபாய் 65.71 காசுகளாக இருந்த டீசல் 68.22 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலையேற்றம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Previous articleஊரடங்கு தளர்வில் எந்தெந்த நிறுவனங்கள், கடைகள் இயங்கலாம்? – சென்னை மாநகராட்சி
Next articleஐசிசி தர வரிசை – முதலிடத்தை இந்தியா இழந்தது ஏன்?