இந்த போனை நீங்கள் கையில் வளைத்து கட்டிக் கொள்ளலாம்!!! புதிய வித்தியாசமான ஸ்மார்போனை அறிமுகம் செய்த மோட்டோரோலா!!!
கையில் வாட்ச் போல வளைத்துக் கட்டக்கூடிய வகையில் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான மோட்டேரோலா அறிமுகம் செய்துள்ளது.
படிக்கக் கூடிய ஸ்மார்ட் பயன்கள் தற்பொழுது மெல்ல மெல்ல மக்களின் பயன்பாட்டுக்காக வந்து கொண்டிருக்கும் நிலையில் மோட்டோரோலா நிறுவனம் அதையும் தாண்டி வேறு ஒரு இடத்திற்கு சென்றுள்ளது. அதாவது மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள கான்செப்ட் ஸ்மார்ட் போன் மோட்டோரோலா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறலாம்.
சமீபத்தில் லெனோவா டெக் வோர்ல்ட் 2023 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மோட்டோரோலா நிறுவனம் தனது ஃபிளக்சிபல் மற்றும் pOLED டிஸ்பிளே கொண்ட கான்செப்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்த இந்த ஸ்மார்ட்போனில் FHD+ pOLED ஸ்கிரீன் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை கையில் வாட்ச் போல வளைத்து கட்டிக் கொள்ளலாம். இந்த வ்மார்ட் போனை மேலும் பல நிலைகளில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஸ்மார்ட் போனை படிக்காமல் சாதாரணமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாகவும் பயன்படுத்தலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அதே போல இந்த ஸ்மார்ட் போனை மடிக்கும் பொழுது இந்த டிஸ்பிளே 4.6 இன்ச் அளவாக மாறி விடுகின்றது. இந்த ஸ்மார்ட்போனை மடிக்கப்பட்ட நிலையில் மோட்டோரோலாவின் ரேசர் பிளஸ் கவர் ஸ்கிரீன் போலவே பயன்படுத்தலாம்.
மோட்டோரோலா அறிமுகம் செய்துள்ள புதிய பிளக்சிபல் கான்செப்ட் ஸ்மார்ட்போன் எப்பொழுது விற்பனைக்கு வரும் என்பது பற்றி தெரியவில்லை. இந்த கான்செப்ட் ஸ்மார்ட்போனுக்கான முன்னோட்டம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
மோட்டோரோலா நிறுவனத்தை போலவே விவோ, டி.சி.எல், டிரான்சிசன் ஹோல்டிங்க்ஸ் ஆகிய நிறுவனங்களும் ரோலபில் அதாவது வைக்கக் கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இவற்றின் அறிமுகம் அடுத்த ஆண்டில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.