நாளை நிகழவிருக்கும் பகுதிநேர சந்திரகிரகணம்!!! இந்தியாவில் பார்க்க முடியுமா!!?

0
133
#image_title

நாளை நிகழவிருக்கும் பகுதிநேர சந்திரகிரகணம்!!! இந்தியாவில் பார்க்க முடியுமா!!?

நாளை அதாவது அக்டோபர் 28ம் தேதி இந்த வருடத்திற்கான சந்திர கிரகணம் நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவில் தெரியும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர் கேட்டில் வரும்பொழுது ஏற்படுகின்றது. இதில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் பொழுது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாக மறைத்து விடும் இதை சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகின்றது.

அதே போல சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும். அந்த சமயம் சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளியை உண்டாக்க விடாமல் தடுக்கும். அப்பொழுது சந்திரகிரகணம் ஏற்படுகின்றது.

அந்த வகையில் அக்டோபர் 14ம் தேதி சூரிய கிரகணம் நடைபெற்றது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. மேலும் 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதனால் சூரிய கிரகணம் ஏற்பட்ட அந்த நாள் ஜோதிட சாஸ்திரத்தில் படி மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாக பார்க்கப்பட்டது.

பொதுவாக சூரிய கிரகணம் நடந்து முடிந்த பிறகு சந்திர கிரகணம் ஏற்படும். அந்த வகையில் கடந்த அக்டோபர் 14ம் தேதி சூரிய கிரகணம் முடிந்ததை அடுத்து நாளை(அக்டோபர்28) சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. அந்த வகையில் நாளை(அக்டோபர்28) நள்ளிரவுக்கு மேல் நிகழும் சந்திர கிரகணம் மறுநாள் அதிகாலை வரை நடைபெறவுள்ளது.

அந்த வகையில் நாளை(அக்டோபர்28) இரவு 11.31 மணிக்கு தொடங்கி மறுநாள்(அக்டோபர் 29) அதிகாலை 3.36 மணிக்கு நடைபெறவுள்ளது. இருந்தும் பூமியின் இருண்ட நிழல் சந்திரன் மீது விழுவது அக்டோபர் 29ம் தேதி நள்ளிரவு 1.05 மணிக்கு தொடங்கி 2.24 மணி வரை நடைபெறும் என்று பிஐபி அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை(அக்டோபர்28) நடைபெறவுள்ள சந்திரகிரகணம் ஆசியா, அமெரிக்கா, அண்டார்டிகா, ரஷ்யா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் தெரியும். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இந்த சந்திரகிரகணத்தை பார்க்க முடியும். இந்த சந்திர கிரகணத்தை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம். மேலும் தெளிவாக தெரிய வேண்டும் என்றால் இருளாக இருக்கும் பகுதியில் சென்று பார்க்கலாம். தொலைநோக்கி, பைனாகுலர்கள் ஆகியவற்றை வைத்து பார்க்கும் பொழுது இன்னும் தெளிவாக தெரியும்.

Previous articleகறிக்காக லாரியில் கடத்தப்பட்ட பூனைகள்! பன்றி மற்றும் ஆட்டு இறைச்சியுடன் கலக்க கொண்டு சென்றதாக தகவல்
Next articleTirumala Tirupati Devasthanams: திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 8 மணி நேரத்திற்கு ஏழுமலையான் தரிசனம் ரத்து!!