Breaking: தமிழக அரசியலில் அடுத்த திருப்பு முனை.. எங்க கட்சிக்கே வந்துருங்க!!அண்ணாமலையின் அவசர நடவடிக்கை!!
தமிழக பாஜக அண்ணாமலையின் வலது கை அமர் பிராசத் என்று கூறினால் அவரது இடது கையாக வேலை செய்து வந்தது திருச்சி சூர்யா சிவா தான். சிறுபான்மை கட்சி தலைவி டெய்சி மற்றும் சூர்யா சிவா இருவருக்கும் இடையே பதவி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த திருச்சி சூர்யா சிவாடெய்சி சரணை மிகவும் அவதூறாக பேசி இருப்பார்.
அந்த ஆடியோ வெளியானதை அடுத்து பலரும் கண்டதும் தெரிவித்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ,திருச்சி சூர்யா சிவாவை கட்சியிலிருந்து ஆறு மாதம் காலத்திற்கு சஸ்பெண்ட் செய்தார். இதனிடையே அவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள கூடாது என்ற உத்தரவையும் அமல்படுத்தினார்.
இந்த உத்தரவை அடுத்து திருச்சி சூர்யா சிவா கட்சியை விட்டு விலகுவதாக கூறி பதிவு ஒன்று போட்டதோடு அண்ணாமலைக்காக எப்பொழுதும் நான் நிற்பேன் என கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த சர்ச்சை சில மாதங்களாக காணாத நிலையில் நேற்று மீண்டும் ஆரம்பித்துள்ளது.
அந்தவகையில் திருச்சி சூர்யா சிவா அதிமுகவில் இணைய போவதாக தகவல் ஒன்று தீயாக பரவியது. இதனிடையே பாஜகவின் ஐ டி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் மற்றும் அதன் செயலாளர் திலீப் கண்ணன் உள்ளிட்ட 13 நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தது அண்ணாமலைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதுமட்டுமின்றி அது கட்சிக்கு பின்னடைவையும் ஏற்படுத்தியது.இதனிடையே திருச்சி சூர்யாவும் தற்போது இணையுள்ள செய்தி இவருக்கு மேலும் அதிர்ச்சியை தான் ஏற்படுத்தி இருக்கும்.
இந்நிலையில் பாஜக அண்ணாமலை ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட திருச்சி சூர்யா சிவா அவர்களுக்கு மீண்டும் அவருடைய பதவி வழங்கப்படும் என்றும், அவர் மீது உள்ள அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்வதாகவும் கூறியுள்ளார். இவரின் இந்த அறிவிப்பை பார்க்கையில் சற்று அதிமுகவை கண்டு அஞ்சி உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ள இந்த அவசர முடிவை எடுத்தது போல் உள்ளது.
தற்பொழுது அதிமுகவில் இணைந்துள்ள பாஜக நிர்வாகிகள் பலருக்கும் அண்ணாமலையின் உண்மை தன்மைகள் தெரியும். சூர்யா சிவாவும் அதிமுகவிற்கு சென்றுவிட்டால் பாஜகவிற்கு எந்த ஒரு பலமும் கிடையாது அது மட்டுமின்றி இவரது உண்மைகள் வெளிப்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. இதனையெல்லாம் எண்ணி தான் அண்ணாமலை இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டார் என்று பலரும் கூறுகின்றனர்.
மீண்டும் திருச்சி சூர்யா சிவா கட்சியில் இணையும் பட்சத்தில் ஆர் எஸ் எஸ் முழுநேர ஊழியராக இருந்து பாஜக வில் இணைந்த கேசவ விநாயகம் பற்றிய பல உண்மைகள் வெளிவரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.