கொரோனா தொற்று ஜூன், ஜுலையில் உச்சத்தை தொடும் – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குனர்

0
128

கொரோனா தொற்று ஜூன், ஜுலையில் உச்சத்தை தொடும் – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குனர்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ துவங்கி கொரோனா தொற்று பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஓரளவிற்க்கு கொரோனா தொற்று கட்டுபாட்டில் இருந்தாலும், கடந்த இரண்டு வாரங்களாக பல பேருக்கு தொற்று பரவி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 52,952 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுள்ளனர். இந்நிலையில் நாட்டில் கொரோனா பரவும் வேகத்தை வைத்துப் பார்க்கும் போது, உச்சகட்ட தொற்று வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நிகழலாம் என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறி உள்ளார்.

இன்று டெல்லியில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது இது குறித்து கொரோனா பாதிப்பு குறித்து பேசியவர் “நம்மிடம் இப்போது இருக்கும் புள்ளிவிவர மாதிரியின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், உச்சகட்ட தொற்றின் காலம் முன் பின் மாற வாய்ப்புள்ளது என்றும் கூறினார். அதே சமயம் ஊரடங்கை நீட்டித்துள்ளதால் கிடைக்கும் பலன், தொற்று பரவுவதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியனவும் உச்சகட்ட தொற்று காலத்தை முடிவு செய்வதில் முக்கிய இடத்தை வகிக்கும்” என தெரிவித்துள்ளார்.

Previous articleகொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து மூலம் பரிசோதனை – மத்திய அரசு
Next articleஉயிர் கொல்லி கொரோனா… கலங்கும் உலக நாடுகள்… பலி எண்ணிக்கையால் நீளும் பட்டியல்..!!