ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கூடாது – உயர்நீதி மன்றம் அதிரடி

0
110

ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கூடாது – உயர்நீதி மன்றம் அதிரடி

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து, நேற்று முதல் டாஸ்மாக் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடை திறக்கும் என அறிவிக்கபட்டிருந்தது.அறிவிக்கப்பட்டது போலவே சென்னையை தவிர தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில்,கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், மது வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், நாளை ஒவ்வொரு டாஸ்மாக் கடைகள் முன்பும் 2 போலீசார் மற்றும் 4 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும், மதுவாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து நேற்று சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. முதல்நாள் முடிவில் சுமார் 170 வசூலானது. பல இடங்களில் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வரும் வரை தமிழகத்தில் மதுபானக்கடைகள் மூட வேண்டும் எனவும் ஆன்லைனில் மது விற்பனை செய்யலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் நிபந்தனைகள் மீறப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றம் மேற்கண்ட அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Previous articleதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு? அதிர்ச்சியளிக்கும் தகவல்
Next articleஇந்த தேதியிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு!