நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன்!

0
124
#image_title

நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன்!

நேற்று(நவம்பர்8) நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் சுற்றில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது.

நேற்று(நவம்பர்8) புனேவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் 40 லீக் சுற்றில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற நடப்பு சாம்பியன் இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் செய்தது.

இதையடுத்து டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய டேவிட் மாலன் அரைசதம் அடித்து 87 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்து 108 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கிறிஸ் வோக்ஸ் அரைசதம் அடித்து 51 ரன்கள் சேர்த்தார். நெதர்லாந்து அணியில் பந்துவீச்சில் பாஸ் டி லிடே மூன்று விக்கெட்டுகளையும் வான் பீக், ஆர்யன் டட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், வான் மீக்கெரென் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 340 ரன்கள் என்ற பெரிய இலக்கை கொண்டு நெதர்லாந்து அணி களமிறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் மேக்ஸ் ஓடோவ்ட் 5 ரன்களிலும் பின்னர் களமிறங்கிய காலின் அக்கெர்மேன் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

தொடர்ந்து பொறுமையாக விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் வெஸ்லே பர்ரேசி 37 ரன்களுக்கும் சைப்ரன்ட் எக்கல்பிரெச்ட் 33 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் களமிறங்கிய ஸ்காட் எட்வர்ட்ஸ் பொறுமையாக விளையாடினார். பாஸ் டி லீடே 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய டேஜா நிடமனுரு ஸ்காட் எட்வர்ட்ஸ் அவர்களுடன் இணைந்து ரன்களை சேர்க்கத் தொடங்கினார்.

தொடர்ந்து விளையாடிய ஸ்காட் எட்வர்ட்ஸ் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் கடைசி வரை நிதானமாக விளையாடிய டேஜா நிடமனுரு ஒரு புறம் ரன்களை சேர்க்க மறுபுறம் விக்கெட்டுகளை வீழ்ந்துகொண்டே இருந்தது. இதனால் நெதர்லாந்து அணி 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டாகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

கடைசி வரை விளையாடிய டேஜா நிடமனுரு 41 ரன்களை சேர்த்தார். இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய அதில் ரஷித், மொயீன் அலி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். டேவிட் வில்லே இ விக்கெட்டுஙளையும் கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனால் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று. இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் இதுவரை புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த இங்கிலாந்து தற்பொழுது 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து அணி கடைசி லீக் போட்டியில் நவம்பர் 11ம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.

Previous articleசெரிமான சக்தியை அதிகரிக்க வேண்டுமா! இலந்தை பழத்தை இப்படி சாப்பிடுங்க!!
Next articleதேர்தலில் அம்பேத்கர் அவர்களை தோற்கடித்தது யாரு தெரியுமா! தெலுங்கானா முதல்வர் பரபரப்பு பேட்டி!!