அதிகரித்த உடல் பருமன் பிரச்சனை! மனமுடைந்த மருத்துவ மாணவி 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!

0
120
#image_title

அதிகரித்த உடல் பருமன் பிரச்சனை! மனமுடைந்த மருத்துவ மாணவி 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!

உடல் பருமன் பிரச்சனை காரணமாக மனமுடைந்த மருத்துவ மாணவி ஒருவர் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் குந்திகான் என்ற பகுதியில் ஏ.ஜே மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவக் கல்லூரியில் பிரக்ருதி ஷெட்டி என்ற 20 வயது மாணவி எம்.பி.பிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவி பிரக்ருதி ஷெட்டி அவர்களின் சாந்த ஊர் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அதானி ஆகும். மாணவி பிரக்ருதி ஷெட்டி அவர்களின் தந்தை அதே ஊரில் மருத்துவராக பணியாற்றி வருகின்றார்.

பிரக்ருதி ஷெட்டி அவர்கள் ஏ.ஜே மருத்துவக் கல்லூரியில் இருக்கும் விடுதியில் தங்கி படித்து வருகிறார். மாணவி பிரக்ருதி ஷெட்டி அவர்கள் தங்கி இருக்கும் அறை விடுதியின் முதல் தளத்தில் இருக்கின்றது.

இந்நிலையில் நேற்று(நவம்பர்13) அதிகாலை மாணவி பிரக்ருதி ஷெட்டி அவர்கள் முதல் தளத்தில் இருந்து விடுதியின் 6வது மாடிக்கு சென்றார். பின்னர் மாணவி பிரக்ருதி ஷெட்டி அவர்கள் 6வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவி பிரகிருதி ஷெட்டி இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் மாணவி பிரக்ருதி ஷெட்டி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மாணவி பிரக்ருதி ஷெட்டி அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவி பிரக்ருதி ஷெட்டி அவர்கள் தங்கியிருந்த அறையில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாணவி பிரக்ருதி ஷெட்டி அவர்கள் எழுதியிருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில் மாணவி பிரக்ருதி ஷொட்டி அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த கடிதத்தில் மாணவி பிரக்ருதி ஷெட்டி அவர்கள் “எனது உடல் பருமன் மிகவும் அதிகமாக உள்ளது. என்னுடைய உடல் பருமனை குறைக்க கடுமையான பயிற்சிகளை நான் மேற்கொண்டபோதிலும் அது எனக்கு பலன் கொடுக்கவில்லை. உடல் பருமன் அதிகமாக இருப்பதால் அடிக்கடி எனக்கு உடல் நல பாதிப்புகளும் ஏற்படுகின்றது. எனவே நான் வாழ்க்கையில் விரக்தியடைந்துவிட்டேன். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்துள்ளேன். நான் இந்த முடிவை எடுப்பதற்காக எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள்” என்று உறுக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் விடுதி மாணவர்கள் மத்தியிலும் அப்பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Previous articleநேபாளத்தில் டிக்டாக் செயலிக்குத் தடை! சோகத்தில் பயனாளிகள்!!
Next articleதமிழகம் முழுவதும் கனமழை எதிரொலி!! இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு!!