பாய்ந்தது தேசத் துரோக வழக்கு – கைதாகிறாரா சீமான்?

0
171

பாய்ந்தது தேசத் துரோக வழக்கு – கைதாகிறாரா சீமான்?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோயமுத்தூரில் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்திருந்தது. அச்சமயத்தில், கோவை ஆத்துப்பாலத்தில் பிப்ரவரி மாதம் 22ம் தேதி இஸ்லாமியக் கூட்டமைப்பு நடைபெற்ற போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அந்த கூட்டத்தில் அவர் பேசும் போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கடுமையாகச் சாடினார். மேலும் மத்திய, மாநில அரசுகள் மீதும் கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

தற்போது இந்த கூட்டத்தில் பேசிய சீமான் மீது, கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் இப்போது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசத்துரோகம், விரோத உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து சீமான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Previous articleடாஸ்மாக் நீதிமன்ற தீர்ப்பு மக்கள் நீதி மய்யம் தொடுத்த வழக்கினாலா! – உண்மை என்ன?
Next articleசரக்கு பாட்டிலுக்குள் இருந்த தவளை – டாஸ்மாக் அதிர்ச்சி