பாகிஸ்தான் வீரரைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கும் கொரோனா தொற்று உறுதி!
டிசம்பர் மாதத்தில் சீனாவில் பரவ துவங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதிலும் பரவி வருகிறது.
கொரோனாவின் பிடியிலிருந்து பிரபலங்கள் கூட தப்பவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்காட்லாந்தின் மஜித் ஹக் மற்றும் பாகிஸ்தானின் சபார் சர்ப்ராஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது.
இந்நிலையில் இவர்களைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான சோலோ நிக்வேனிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் ஏற்கனவே கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு உடல் உபாதைகளுடன் போராடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது அவரை மேலும் கலங்கச் செய்துள்ளது.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில் “கடந்த ஆண்டு எனக்கு கில்லன் பார் சின்ட்ரோம் நோய் வந்தது. கடந்த 10 மாதங்களாக அதை எதிர்த்துப் போராடி வருகிறேன். அதிலிருந்து பாதி அளவே மீண்டுள்ளேன். எனக்கு டிபி உள்ளது. என் கணையம், சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது. இப்போது கொரோனா வைரஸ் பரிசோதனையில் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதெல்லாம் எனக்கு மட்டும் ஏன் நடக்கிறது என எனக்குப் புரியவில்லை?” என்று தனது சோகத்தைப் பகிர்ந்துள்ளார்.
இவரின் இந்த பதிவு ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.