இவர்களுக்கு மட்டும் 1000 ரூபாய் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு

0
171
Tamil Nadu-Assembly
Tamil Nadu-Assembly

இவர்களுக்கு மட்டும் 1000 ரூபாய் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ம்தேதி நள்ளிரவு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களுக்கு வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

இதனால் நியாயவிலைக்கடை அட்டைதாரர்கள் (அரிசி மட்டும்) அனைவருக்கும் கடந்த மாதம் 1000 ரூபாய் நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு. மேலும் விலை இல்லா அரிசி, சீனி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றையும் கொடுத்தது. மேலும் ஜூன் வரை இந்த விலை இல்லா பொருட்கள் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில் 14 வகையான நலவாரிய தொழிலாளர்களுக்கும் மீண்டும் 1000 ரூபாய் நிவாரணம் அளிக்கவிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் கீழ்க்கண்ட நலவாரியத்தினர் பயனடைவார்கள்:

தூய்மை பணி நலவாரியத்தினர் 30780 பேர்
திரைக்கலைஞர்கள் நலவரியரித்தினர் 21679 பேர்
நரிக்குறவர் நலவாரியத்தில் உள்ள 12670 பேர்
காதி நலவாரியத்தில் உள்ள 9042 நெசவாளர்கள், திருநங்கைகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 6553 பேர்
சலவை தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 3826 பேர்
முஸ்லிம் உல்மாக்கள் நலவாரியத்தில் உள்ள 14622 பேர்
சில குறிப்பிட்ட பழங்குடியினர் நலவாரியத்தினர் 33687 பேர் (de-notified communities welfare board)

இதற்காகத் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 83,99,50,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்
839950 பேர் பயனடைவார்கள்.

Previous articleஉலகம் முழுவதும் கொரோனா தொற்று புதிய உச்சம் : செய்வதறியாது தவிக்கும் நாடுகள்..!!
Next articleசம்பளத்தை குறைத்தால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கும் தொழிலாளர் ஆணையம்