இரு மடங்காக உயரும் ஆம்னி பேருந்து கட்டணம்

0
123

இரு மடங்காக உயரும் ஆம்னி பேருந்து கட்டணம்

தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆம்னி பஸ் என்று அழைக்கப்படும் தனியார் பேருந்து சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனிடையே பல மாநில அரசுகள், சமூக இடைவெளியுடன் போக்குவரத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது,

இந்நிலையில் ஆம்னி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தால், டிக்கெட் விலை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசு சார்பில் ஆம்னி பேருந்து இயக்க அனுமதி வழங்கியதும் தற்போது ஒரு கி.மீ.,க்கு ரூ.1.60 இருக்கும் கட்டணம் ரூ.3.20 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியுடன் கூடிய வகையில் பயணிகளை அமர வைக்க வேண்டும் என்பதாலும், சுங்கச்சாவடி கட்டண உயர்வாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் கூறுகையில், ஆம்னி பேருந்துகள் இயக்க நெறிமுறைகளை அரசு, அளித்த பிறகே பேருந்து கட்டணம் உயர்வு குறித்து முடிவு செய்யப்படும் எனக் கூறியுள்ளனர்.

Previous articleஎச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் – தமிழக ஆட்சியர் அதிரடி
Next articleஇரண்டாம் கட்ட திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன் – விவசாயிகள் உட்பட பலருக்கு சலுகை