மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் தனிமைப் படுத்தப்படுவார்கள் – திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு

0
99

மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் தனிமைப் படுத்தப்படுவார்கள் –  திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இது குறித்து மருத்துவர்கள் மற்றும் வல்லுநர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தமிழக அரசு இன்று கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் குறித்த வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

அதில் இடம்பெற்றுள்ள வழிமுறைகள்:

  • ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை செய்யப்படும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவருமே 14 நாட்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவர்.
  • வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். கொரோனா தொற்று உறுதியானால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். இல்லையெனில் 7 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள், விடுதிகள் உள்ளிட்ட நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவர். அந்த 7 நாட்களுக்கு பின்னர் பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரிய வந்தால் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தனிமைப்படுத்தப்படுவர். இல்லையெனில் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவர்.
  •  வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். கொரோனா தொற்று உறுதியானால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். தொற்று இல்லையெனில், 7 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள், விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவர். 7 நாட்களுக்கு பின்னர் அடுத்த பரிசோதனை செய்யப்படும் அதில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தால், அவரவர் வீடுகளில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்
  • வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்து உடனடியாக மருத்துவமனை செல்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு வருபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Previous articleஇரண்டாம் கட்ட திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன் – விவசாயிகள் உட்பட பலருக்கு சலுகை
Next articleகொரோனா இல்லா 5 தமிழக மாவட்டங்கள்