சிவாஜி கணேசன் கட்டிய தாலியை ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்த நடிகை பத்மினி!

0
216
#image_title

எந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் இருந்தாரோ பத்மினி அவர் செய்த இந்த செயல்தான் இப்பொழுது பேசும் பொருளாக மாறி உள்ளது. நடிகை பத்மினி அவர்கள் சிவாஜி கணேசன் கட்டிய தாலியை ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்திருந்த சம்பவத்தை குட்டி பத்மினி அவர்கள் யூடியூப் சேனல்களில் சொன்னது தான் அது.

நாட்டிய பேரொளி நாட்டிய பத்மினி என்ற பல பட்டங்களை பெற்றவர் நடிகை பத்மினி. அவரை போல நாட்டியத்தில் யாரும் ஆட முடியாது என்கின்ற அளவுக்கு இன்றளவும் அவரைப் பற்றி பேசும் அளவிற்கு புகழ் படைத்தவர் அவர். மூன்று அக்கா தங்கைகள் லலிதா ராகினி பத்மினி மூன்று பேரும் கேரளாவில் வளர்ந்த துள்ளி குதித்து வந்த அக்கா தங்கைகள்.

 

அவர்களை விட பத்மினி நடிப்பிலும் அழகிலும் நாட்டியத்திலும் மிகச் சிறந்து விளங்கினார். முதல் முதலில் கல்பனா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

 

சிவாஜியுடன் ‘ராஜாராணி’, ‘தங்கப்பதுமை’, தெய்வப்பிறவி’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘வியட்நாம் வீடு’, ‘பேசும் தெய்வம்’, ‘இருமலர்கள்’ என 50-க்கும் மேற்பட்ட ஹிட் படங்களில் நடித்து அசத்தினார். இதேபோல், எம்.ஜி.ஆருடன் ‘மன்னாதிமன்னன்’, ‘மதுரை வீரன்’ என்று பல படங்களில் நடித்தார்.

 

நடிகர் MR ராதா சேர்ந்து நடித்த சித்தி என்ற படம் மாபெரும் வெற்றியை அவருக்கு பெற்று தந்தது. இந்த படத்தில் அவர் நடித்த நடிப்பை பாராட்டாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம்.

 

இப்படி இருந்த பத்மினி படபடப்பில் தனக்கு கட்டப்பட்ட தாலியை கழற்றாமல் வைத்திருந்ததை பற்றி தான் குட்டி பத்மினி அவர்கள் தனது youtube சேனல்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

 

ஒரு நாள் சிவாஜியும் பத்மினியும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தனர். அன்றைக்கு சிவாஜி கணேசனுக்கு கமலா அவர்களுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படப்பிடிப்பில் பத்மினிக்கு தாலியை கட்டிவிட்டு , உண்மையான திருமணத்திற்காக கமலாவை கல்யாணம் செய்ய சுவாமிமலைக்கு புறப்படுகிறார் சிவாஜி கணேசன்.

 

அந்தப் படபடப்பில் கல்யாணம் முடிந்தவுடன் சிவாஜி கணேசன் நேரடியாக சுவாமிமலைக்கு சென்று விட்டார். ஆனால் சிவாஜி கணேசன் கட்டிய தாலியை அலைபாயுதே படத்தில் வரும் ஷாலினியை போல் தனது ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்திருந்தாராம் பத்மினி.

 

இதைப் பார்த்த ராகினி தனது அம்மாவிடம் சொல்லவே. பத்மினியின் அம்மா பத்மினியை திட்டவே அங்கு மிகப்பெரிய ரகளை நடந்துள்ளது. அந்த தாலியை கழட்டி விட்டாராம் பத்மினி.

 

தாலியை தான் கழற்றினார். ஆனால் மனதில் இருந்த சிவாஜி கணேசன் மறக்கவில்லை என்று youtube சேனலில் குட்டி பத்மினி சொல்லி இருக்கிறார்.