சமையலுக்கு பயன்படும் நெய்! முகத்தில் தடவினால் இவ்வளவு நன்மைகளா?
நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் நெய்யை முகத்தில் தடவினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
நம்முடைய வீட்டில் நெய்யானது சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தி வருகின்றோம். நெய்யை சமையலில் பயன்படுத்தும் பொழுது உணவிற்கு தனி சுவையை தருகின்றது. இதனால் நெய்யானது சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நெய்யில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் நெய்யில் லினோலிக் ஆசிட் மற்றும் சங்கிலித் தொடர் கொழுப்பு அமில வேதிப் பொருட்கள் உள்ளது. இந்த நெய்யை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
நெய்யை சமையலுக்கு பயன்படுத்தும் பொழுது கிடைக்கும் நன்மைகள்…
* நெய்யை வறண்ட உதடுகளில் தடவி வந்தால் வறட்சி நீங்கும். மேலும் பிங் நிறத்திலான உதடுகள் கிடைக்கும்.
* ஒரு சிலருக்கு கண்களை சுற்றி இருக்கும் இருக்கும். அந்த கருவளையத்தை மறைய வைக்க கண்களை சுற்றி நெய்யை தடவி வந்தால் கருவளையம் மறையத் தொடங்கும்.
* நம்முடைய முகத்தில் நெய்யை தேய்த்து மசாஜ் செய்து வந்தால் நம்முடைய முகம் பொலிவு பெறும். மேலும் முகம் புத்துணர்ச்சி பெறும்.
* 10 சொட்டுகள் நெய் எடுத்து அதை கை மற்றும் கால்களில் தேய்த்து ஒரு மணி நேரம் கழிந்து குளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்.
* நெய்யை நாம் சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமத்தின் அழகை இது மேம்படையச் செய்யும்.
* முகத்தில் நெய்யை தொடர்ந்து தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கும்.
* வறண்ட சருமம் உள்ளவர்கள் அனைவரும் நெய்யை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வர வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் வறண்ட சருமத்திற்கு நெய் முற்றுப்புள்ளி வைத்து விடும்.