டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் – உஷார் மது பிரியர்களே

0
127

டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் – உஷார் மது பிரியர்களே

மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலிலிருந்த நிலையில், கடந்த 3ம் தேதியிலிருந்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த பல எதிர்ப்புகளை மீறிக் கடந்த 7ம் தேதி சென்னையைத் தவிர்த்துப் பிற இடங்களில் மதுக்கடைகளைத் திறந்தது தமிழக அரசு. மதுக்கடைகளைத் திறக்க பல்வேறு விதிமுறைகளை உயர் நீதிமன்றம் விதித்திருந்த நிலையில், அவை எதையுமே பெரும்பாலான கடைகளில் பின்பற்றாத காரணத்தால் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதி மன்றம், டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டது. ஊரடங்கு முடியும் வரை ஆன்லைன் மூலம் மட்டுமே மதுக்களை விற்க அனுமதியளித்தது. அந்த வழக்கின் மீது மேல் முறையீடு செய்திருக்கும் தமிழக அரசு தற்போது வரை தமிழக அரசு இணையதளமோ, செயலியோ மது விற்பனைக்கென்று அதிகார்வமாக அறிவிக்கவில்லை.

இதனையடுத்து இதன் மீது நடவடிக்கை எடுத்து சைபர்லிங்க் காவல்துறை இரவோடு இரவாக அந்த இணையதளத்தை முடக்கியுள்ளது.

Previous articleஆந்திரா, கேரளா, கர்நாடகா செல்ல இதைச் செய்யுங்கள் – தமிழக போக்குவரத்துத் துறை
Next articleகாலை 10 மணி முதல் வீடு தேடி வரும் மதுபானம் – அரசு அறிவிப்பு