விசில் வராத குக்கரை எப்படி சரி செய்வது!

0
209
#image_title

நமது எல்லோர் வீட்டிலும் இப்பொழுது குக்கர்களை பயன்படுத்தி வருகிறோம். அந்த குக்கரில் வாஷர் போய்விட்டது என்றால் அதை நம்மால் பயன்படுத்த முடியாது இதை எப்படி சரி செய்வது என்பதை பற்றித்தான் இந்த வீடியோவில் பார்க்க போகின்றோம்.

 

முதலில் குக்கரை எடுத்து அதில் வாசர் அனைத்தையும் போட்டுவிட்டு விசில் போடும் இடத்தில் இருக்கும் துளையில் வாயை வைத்து ஊதுங்கள். அப்படி ஊதுபொழுது நல்ல குக்கர் ஆக இருந்தால் காற்று வெளிவரும் சத்தம் உங்களுக்கு கேட்காது. அப்படி குக்கரில் வாஷர் போய்விட்டது என்றால் உங்களுக்கு நீங்கள் ஊதும் காற்று வெளியே போவதை உங்களால் உணர முடியும்.

 

இது எப்படி வீட்டிலேயே சரி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகின்றோம்.

 

மூடியை தனியாக கழற்றி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வாஷர் கழட்டி விடுங்கள்.

இப்பொழுது நீங்கள் வாஷர் போட்டிருக்கும் இடத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும் அதில் நிறைய கேப் இருக்கிறது என்று.

அதை தான் நாம் சரி செய்ய வேண்டும்.

 

ஒரு மரக்கட்டை இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள்.

சுத்தியலை எடுத்து அதில் முழுவதும் துண்டை கட்டி நன்றாக ஒரு கயிறு வைத்து கட்டிக் கொள்ளுங்கள்.

குக்கர் மூடியை பின் திருப்பி வைத்துக் கொள்ளுங்கள்.

உள்ளே மடங்கி இருக்கும் பகுதிகளை இந்த சுத்தியலை வைத்து இரண்டு இன்ச் உள்ளே போகும் வரை தட்டிக் கொள்ளுங்கள்.

வாஷர் மற்றும் அந்த மடங்கிய பகுதிக்கு இடையே சிறிது இடைவெளி வேண்டும் அப்பொழுதுதான் நம்மளால் வாசரை உள்ளே போட முடியும்.

தட்டியது பின் வாசரை போட்டுவிட்டு மறுபடியும் குக்கரையும் மூடி செக் செய்து பாருங்கள் கண்டிப்பாக காற்று வெளியே வராது.