பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக போண்டாமணி வந்து நம்மை சிரிக்க வைத்த அவர் இன்று காலம் எய்தினார். அவரது இரண்டு கிட்னியும் செயலிழந்த விட டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தார். உடல் மிகவும் மோசமாகவே உயிர் பிரிந்துள்ளது.
போண்டா மணி ஒரு இலங்கை அகதி. இலங்கையில் 16 பேர் ஒரு குடும்பத்தில் ஒரு மினி ஜமீன்தாராக வாழ்ந்து வந்த போண்டாமணி . அங்கு நடந்த மாபெரும் போராட்டத்தின் காரணமாக அங்கு இருந்த ஒரு படகில் உயிர் பிழைத்து தப்பித்து தமிழ்நாடு வந்து சேர்ந்தவர் தான் போண்டாமணி .
அவரது இயற்கை பெயர் வேறு பாக்கியராஜ் படத்தின் மூலம் பவுனுக்கு பவுன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் போண்டாமணி. பாக்கியராஜ் அவருக்கு போண்டாமணி என்ற பெயர் வைத்தாராம்.
போண்டாமணி வடிவேலு அவர்களின் குரூப்பில் இருந்த ஒரு காமெடியன். எந்த படத்தில் வடிவேலு கமிட் ஆனாலும் அவர் அவர்களது குரூப்பில் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு போண்டாமணிக்கு கிடைக்கும். ஆனால் தன்னுடன் சேர்ந்து நடித்த ஒரு கலைஞனின் சாவிற்கு கூட வடிவேலு வரவில்லை.
ஒரு சமயம் வடிவேலுக்கும் சிங்கமுத்துவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது போண்டாமணி பாண்டிச்சேரிக்கு ஒரு விழாவில் கலந்து கொள்ள சென்றிருக்கின்றார். அங்கு ஏகப்பட்ட மீடியாக்கள் அவரை சூழ்ந்து இருந்த பொழுது அத்தனை மீடியாக்களையும் பார்க்காத அவர் மிகவும் எமோஷனல் ஆகியிருக்கிறார்.
அப்பொழுது அவர்கள் சிங்கமுத்து மற்றும் வடிவேலு அவர்களின் பிரச்சினையை கேட்ட போது அவர்கள் இருவரும் இணைய வேண்டும் என்று அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது செய்தியாக பாண்டிச்சேரியில் வெளிவந்தது. அதேபோல் சென்னையில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.
அதைப் பார்த்த வடிவிலோ நைட்டு இரண்டு மணிக்கு போண்டா மணிக்கு போன் செய்து உலகில் இல்லாத அனைத்து கெட்ட வார்த்தைகளையும் சொல்லி அவரை திட்டி உள்ளார். என்ன செய்வதென்றே திகைத்த போண்டாமணி இவர் இப்படி திட்டினால் அடுத்த படத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்று நினைத்தது போண்டா மணி அடுத்த நாள் கலையில் 5:00 மணிக்கு வடிவேலு வீட்டில் போய் நின்று இருக்கின்றார்.
இப்போது வந்துவிடுவார் அப்போது வந்துவிடுவார் என பத்து மணிக்கு வெளியே வருகிறார் வடிவேலு. அவர் வந்த உடனே சாஷ்டாங்கமாக அவரது காலில் விழுந்து கதறி இருக்கிறார் போண்டாமணி. அண்ணா தவறாக சொல்லிவிட்டேன் இது நான் உள்நோக்குதோடு சொல்லவில்லை என்று கதறி அழுகிறார். அப்படி காலில் விழுந்த அவரை நெஞ்சிலேயே மிதி மிதி என்று மிதித்திருக்கிறார் வடிவேலு.
பிறகு அடுத்த பத்து படங்களில் அவரை சேர்க்கவே இல்லையாம் வடிவேலு. தினமும் அவர் வீட்டிற்கு சென்று நின்று நின்று நின்று தான் அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுத்தாராம்.
இவ்வளவு கல் நெஞ்சோடு படைத்தவரா வடிவேலு என்று தான் நினைக்க தோன்றுகிறது.