மது பிரியர்களுக்கு நற்செய்தி!

0
119

மது பிரியர்களுக்கு நற் செய்தி

மதுக்கடைகளைத் தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரிய 2 மனுக்களைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இது அரசின் கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பினை ஒத்திவைத்தது. மேலும், மதுக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததுடன், மனுத் தாக்கல் செய்தவருக்கு ரூ1,00,000 அபராதம் விதிக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

அதே நேரம், டாஸ்மாக் குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. டாஸ்மாக் திறக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, மாநிலத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வாதிட்டது. மேலும், டாஸ்மாக்கிற்கு பதில் வேறு துறைகள் மூலம் இந்த வருவாயை உருவாக்க 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகும் என்றும் தமிழக அரசின் சார்பில் எடுத்துரைக்கப் பட்டது.

இந்நிலையில், மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

Previous articleகடனுக்கு கணவன்.. வட்டிக்கு மனைவி.! கவுன்சிலரின் அடிக்கடி சந்திப்பால் ஆயுளை முடித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம்!
Next article10ம் வகுப்பு பொது தேர்வு – உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு