தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ ‘ரோபோக்கள்’ அறிமுகம்!

0
125

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ ‘ரோபோக்கள்’ அறிமுகம்!

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள் கூட கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் மருத்துவர்கள், செவிலியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டால் என்ன செய்வது என்று யோசித்த அரசு, சாஸ்திரா பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ரோபோக்களை பயன்படுத்த முடிவெடுத்தது.

இதனையடுத்து கொரோனா சிறப்பு மருத்துவமனையாகச் செயல்பட்டு வரும் மதுரை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப் படுகின்றன.

ரூ.3 லட்சம் மதிப்பிலானது. 3.2 கிலோ எடையுடைய இந்த ரோபோக்கள் ஒவ்வொன்றும், ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருத்துவ பணியாளர்கள் அருகில் சென்று பொருட்களை வழங்குவதற்கு பதிலாக இந்த ரோபோக்கள் பொருட்களை எடுத்துச் செல்லும்.

15 கிலோ அளவிற்கு உணவு பொருட்களை எடுத்து செல்லும் திறன்கொண்ட இந்த ரோபோக்களிலுள்ள கேமராக்கள் மூலம் நோயாளி மருத்துவ நிர்வாகத்தினருக்கு தகவல் அனுப்ப முடியும்.

இதே போல் மருத்துவர்களும் கூட நோயாளிகளுக்கு சொல்ல விரும்புகின்ற விஷயங்களை வாய்மொழியாக சொல்லி அந்த செய்தியினை நோயாளியிடம் கொண்டு சேர்க்க முடியும்.

Previous articleவாங்கக் கடலில் உருவாகிறது ‘ஆம்பன்’ புயல் – தமிழகத்தின் நிலை என்ன?
Next articleஇது நடந்தால் கல்லூரிகளை உடனடியாக திறப்போம் – தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர்