இது நடந்தால் கல்லூரிகளை உடனடியாக திறப்போம் – தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர்

Photo of author

By Parthipan K

இது நடந்தால் கல்லூரிகளை உடனடியாக திறப்போம் – தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மார்ச் மாதத்தில் மூடப்பட்டன.

12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மட்டும் நடைபெற்ற நிலையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் நேரடியாகத் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்தது. இன்னும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத நிலையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் தேர்வு நடத்துவதா வேண்டாமா என்று ஆலோசனை நடைபெற்று தற்போது ஜூன் 1ம் தேதி முதல் தேர்வு நடைபெறவிருக்கிறது.

அதே போல் கல்லூரிகளுக்கும் தேர்வு நடைபெறாத நிலையில், கொரோனா கட்டுக்குள் வந்து கல்லூரிகள் திறந்த பின் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை எப்போது திறப்பது மற்றும் தேர்வுகளை நடத்துவது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு ஆய்வு செய்தது. இதனடிப்படையில் செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகளைத் திறக்கலாம் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ததாகத் தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து இந்தியா முழுவதும் கல்லூரிகளை நெறிமுறை படுத்தும் UGC எனப்படும் பல்லைக்கழக மானியக்குழு, நெறிமுறைகளை அறிவித்திருந்தது.

இந்நிலையில் தருமபுரியில் குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசியவரிடம் கல்லூரிகள் திறப்பு குறித்தும், செமஸ்டர் தேர்வு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பதிலளித்தவர் “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுவதும் முடிந்த பின்னரே கல்லூரிகள் திறக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியுள்ள கல்லூரிகளில் தூய்மைப்பணி முடிந்த பிறகே வகுப்புகள் தொடங்கப்படும்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பிறகே கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெறும். கொரோனா தாக்கம் குறைந்த பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெறும்.” என்றார்.

இது நடந்தால் கல்லூரிகள் திறப்போம் – தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மார்ச் மாதத்தில் மூடப்பட்டன.

12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மட்டும் நடைபெற்ற நிலையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் நேரடியாகத் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்தது. இன்னும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத நிலையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் தேர்வு நடத்துவதா வேண்டாமா என்று ஆலோசனை நடைபெற்று தற்போது ஜுன் 1ம் தேதி முதல் தேர்வு நடைபெறவிருக்கிறது.